For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலங்குடி அருகே ரூ.6 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்.. தமிழக அமைச்சர்கள் திறந்து வைப்பு

ஆலங்குடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ரூ.6 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக அமைச்சர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 6 கோடி ரூபாய் செலவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனை இன்று தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர்.

Alangudi has been allotted Rs.6 crore for the initial health cente

அதேபோல, பந்துவக்கோட்டையில் அரசு உயர் நிலைப்பள்ளிக் கட்டிடம், வாண்டான்விடுதி அங்கன்வாடி கட்டிடம், கறம்பக்குடி சார்நிலை கருவூல கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன.

நேற்றைய தினம், பாப்பாபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு என்று தனி மருத்துவமனைகளும் ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளது என்றார்.

இதே போன்று தொற்றாநோய்களாக உள்ள புற்றுநோய், சக்கரை நோய் உள்ளிட்டவைகளை வீடுதோறுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு கண்டறியும் திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட உள்ளதாகவும், புற்றுநோயை கண்டறிவதற்கு 9 அதிநவீன லீனாக் ஆக்சிலேட்டர் தலா 18 கோடி ருபாய் மதிப்பில் நிறுவ பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

English summary
The initial health center was opened at a cost of Rs 6 crore in Alangudi. This was opened by the Tamil Nadu Ministers Vijayabaskar, Kadambur Raju and Udumalai K.Radhakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X