For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தனை பேரையும் ஈர்த்த சிப்பிப்பாறை ஸ்வேதா.. கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி

அகில இந்திய அளவிலான நாய்களின் கண்காட்சி நடைபெற்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி-வீடியோ

    கோவை: கோவையில் அகில இந்திய அளவிலான நாய்களின் கண்காட்சி நடைபெற்றது. தேசிய அளவில் பல நாய்கள் பங்கேற்றிருந்தாலும், அனைவரையும் கவர்ந்தது ராஜபாளையம் டிங்குவும், சிப்பிப்பாறை ஸ்வேதாவும்தான்.

    கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் ஆனைமலை கெனல் கிளப் சார்பில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 450 நாய்கள் கலந்து கொண்டன. நாய்கள் கண்காட்சி என்றாலே, நாய்களின் பற்கள், நடை, உருவ அமைப்பு போன்றவற்றை வைத்து பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதனால் ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர், புள் டாக், டால்மேசன், கிரெடவுன், புல் மாஸ்டிப், ஜெர்மன் செப்பர்ட், உட்பட வகைகளில் பல நாய்கள் கலந்து கொண்டன.

    All India Dogs Exhibition in Coimbatore

    இந்த கண்காட்சிக்கு சென்னையை சேர்ந்த ப்ரீத்தம், பெங்களூர் பகுதியை சேர்ந்த யசோதா மற்றும் மார்ட்டின் நடுவர்களாக அமர்த்தப்பட்டனர். அகில இந்திய அளவில் பல நாய்களின் இடையே தமிழ்நாட்டின் ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை, கன்னி போன்ற வகை நாய்களும் கண்காட்சியில் இடம்பெற்றன.

    All India Dogs Exhibition in Coimbatore

    வாயில் நுழையாத பெயர்களில்லாம் வடநாட்டு நாய்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனாலும் அனைவரையும் ஈர்த்தது நம்ம ஊர் நாய்களே. ராஜபாளையம் டிங்குவும், சிப்பிப்பாறை ஸ்வேதாவும் ஏராளமானோரை கவர்ந்தன. இந்திய நாட்டு நாய் ரகங்களை மற்ற வெளிநாடு நாய்களுக்கு இணையான அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் நம் நாட்டு நாய் ரகங்களும் உலக அளவில் புகழ்பெறும் என இந்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

    English summary
    All India Dogs Exhibition was held in Coimbatore. At this exhibition 450 dogs participated. But Rajapalayam and Chippi Parai dogs attracted everyone
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X