For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#80YearsOfAIR.. 80 ஆண்டுகள் நிறைவு... டிவிட்டரில் டிரெண்டிங்கானது ஆல் இந்தியா ரேடியோ!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் முதன்மையான அரசுத்துறை வானொலி ஒலிபரப்பு நிறுவனமான ஆல் இந்தியா ரேடியோ உருவாகி, இன்றோடு 80 ஆண்டுகளை நிறைவாகியுள்ளது.

டிவி, இணையம், செல்போன் என தற்போது உடனுக்குடன் செய்திகளைப் பெற பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள் வந்து விட்டாலும், அவை எல்லாவற்றிற்கும் முன்னோடி ரேடியோ என்றால் மிகையில்லை.

போர் காலங்கள் ஆகட்டும், வானிலை அறிவிப்புகள் ஆகட்டும் அனைத்திற்கும் மக்கள் ரேடியோ செய்திகளை மட்டுமே நம்பியிருந்த காலம் உண்டு.

80 ஆண்டுகள்...

80 ஆண்டுகள்...

அந்தவகையில் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஆல் இந்தியா ரேடியோ பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இன்றோடு 80 ஆண்டுகள் ஆகின்ரன. இதனைக் கொண்டாடும் வகையில் நெட்டிசன்கள், ‘ஆல் இந்தியா ரேடியோ' என்ற வார்த்தையை டிவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர்.

 முதல் வானொலி ஒலிபரப்பு...

முதல் வானொலி ஒலிபரப்பு...

இந்தியாவின் முதல் வானொலி ஒலிபரப்பு இரண்டு தனியார் வானொலி நிலையங்களுடன், கடந்த 1927ம் ஆண்டு மும்பையிலும், கொல்கத்தாவிலும் தொடங்கப்பட்டது. பின்னர் அதனை 1930ம் ஆண்டு அரசு ஏற்றது.

ஆல் இந்தியா ரேடியோ...

ஆல் இந்தியா ரேடியோ...

முதலில் இது "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்' என்ற பெயரில் ஒலிபரப்பை தொடங்கப்பட்டு, பின்னர் 1936ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, "ஆல் இந்தியா ரேடியோ' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், 1957ல் அதன் பெயர் "ஆகாசவாணி' என்று மாற்றப்பட்டது.

24 மொழிகளில்...

24 மொழிகளில்...

இந்தியா மட்டுமின்றி ஆல் இந்தியா ரேடியோ அயல்நாடுகளுக்கும் ஒலிபரப்பு செய்து வருகிறது. மொத்தம் 24 மொழிகளில் இதன் ஒலிபரப்பை பெற முடிகிறது. இதில், 8 இந்திய மொழிகள் ஆகும்.

சென்னையில்...

சென்னையில்...

ஆல் இந்தியா ரேடியோவின் தலைமையகம் டெல்லியில் ஆகாசவாணி பவன் கட்டிடத்தில் இருந்து இயங்குகிறது. சென்னை நிலையம் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் கடற்கரைக்கு எதிராக அமைந்துள்ளது.

தூர்தர்ஷன்...

தூர்தர்ஷன்...

அகில இந்திய வானொலி எனக் குறிப்பிடப்படும் ஆல் இந்தியா ரேடியோவின் ஒரு பகுதியாக இருந்த டெலிவிஷன் சர்வீஸ் 1976ம் ஆண்டு முதல் தூர்தர்ஷன் என்ற புதிய பெயரில் தனித்து இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மன் கி பாத்...

மன் கி பாத்...

தற்போது இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட தனியார் வானொலி நிறுவனங்கள் உள்ளன. ஆனபோதும் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள் இன்றளவும் அசைக்க முடியவில்லை. எனவே தான், மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று, பிரதமர் மோடி ‘மன் கி பாத்' என்ற பெயரில் ஆல் இந்தியா ரேடியோவில் பேசி வருகிறார்.

English summary
All India Radio (AIR) today completes 80 years today. On this day in 1936 the Indian State Broadcasting Service became All India Radio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X