For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல்ஹாசன், டொனால்ட் ட்ரம்ப், கிம்மை சந்தித்தாலும் கவலையில்லை.. ஜெயக்குமார் பேட்டி

அனைத்து திட்டங்களும் மக்களின் வசதிக்காகத்தான் போடப்படுகின்றன. அரசின் நன்மைக்காக அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் வசதிக்காகத்தான் சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் போடப்படுகிறன்றன. அரசின் நன்மைக்காக அல்ல என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

உடலும் உள்ளமும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு யோகா அவசியம். அதனால் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

நம்முடைய தமிழகம் வளர்ச்சிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகம் அடிப்படைக் கட்டமைப்புகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவு முழுமையடைந்த மாநிலங்களில் ஒன்று. உதாரணத்துக்கு, ஈ.சி.ஆர். சாலை ஒரு வழிச்சாலையாக இருந்தபோது, அதிகமான விபத்துகள் நடந்தது. சாலை அமைத்த பின்னர் விபத்து 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

அரசுக்கான திட்டம் இல்லை

அரசுக்கான திட்டம் இல்லை

அதனால், மக்களின் வசதிக்காகத்தான் எந்த திட்டமும் போடப்படுகிறது. அரசாங்கத்தின் நன்மைக்காக எந்த ஒரு திட்டமும் போடப்படுவதில்லை. அதனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியம்.இழப்பீடு தொகையும் 3 மடங்காக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டு பேசலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கட்சிக்கும் கட்சிக்கும் உறவு இல்லை

கட்சிக்கும் கட்சிக்கும் உறவு இல்லை

மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவின் பார்வைக்கு ஏங்கிக்கிடந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கும் ஆட்சிக்கும் உறவு உண்டு. கட்சிக்கும் கட்சிக்கும் உறவு இல்லை என்றால் அதை விமர்சனம் செய்கிறார்கள்." என்று கூறினார்.

யாரையும் சந்திக்கட்டும்

யாரையும் சந்திக்கட்டும்

மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடனான சந்திப்புகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டு அவரது உரிமை. அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையும்கூட சந்திக்கட்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் மக்களோடு மக்களாக் இருப்பதால் பொருட்படுத்த தேவையில்லை"என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிலளித்தார்.

English summary
Tamilnadu fisheries Department minster Jaykumar says, all plans to people welfare, not to government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X