For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கழுத்து வரை ஏறி நிற்பது மழை நீர் மட்டுமல்ல... காய்கறி, மீன், பூ விலையும்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையில் காய்கறி விலை 2 மடங்கு உயர்ந்து விட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவு காய்கறிகள் லாரிகளில் வரும். ஆனால் மழையின் காரணமாக 500 லாரிக்கு பதில் 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்தது.

இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் இருமடங்கு உயர்ந்து விட்டது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் மீன் விலையும் உயர்ந்து விட்டது.

All the rates of fish, flower and vegetables increased

காய்கறிகள் விலை:

தக்காளி - ரூ.80
கேரட் - ரூ.70
பீன்ஸ் - ரூ.90
அவரை - ரூ.80
வெண்டைக்காய் - ரூ.70
கத்தரிக்காய் - ரூ.50
மாங்காய் - ரூ.100
கோஸ் - ரூ.30
சேனை - ரூ.40
சேம்பு - ரூ.50
முருங்கைக்காய் - ரூ.100
கருணை - ரூ.60
பாகற்காய் - ரூ.40
வெங்காயம் - ரூ.35
சின்னவெங்காயம் - ரூ.80
இஞ்சி - ரூ.80
கோவக்காய் - ரூ.60
பச்சைமிளகாய் - ரூ.40

All the rates of fish, flower and vegetables increased

சென்னையில் இன்று விற்கப்பட்ட மீன் விலை:

வஞ்சிரம் - ரூ.600
வவ்வால் - ரூ.500
நண்டு - ரூ.300
சுறா - ரூ.400
சங்கரா - ரூ.300
இறால் - ரூ.500

உயர்ந்து நிற்கும் பூ விலை:

இதேபோல் பூ விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளது. மல்லி 300 கிராம் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் 100 கிராம் 80 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது.

ரொம்ப ஜாஸ்தி:

அரளி பூ 1 கிலோ ரூ.150, சாமந்தி 1 கிலோ ரூ.120 ஸ்டார் ரோஸ், பன்னீர் ரோஸ் 1 கிலோ ரூ.160க்கும் விலை உயர்ந்துள்ளது. சம்பங்கி 300 கிராம் ரூ.50க்கு விற்கப்பட்டது.

கனமழையால் சேதம்:

சென்னைக்கு ஓசூர், கடப்பா, பெரியபாளையம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்துதான் அதிக அளவு பூ வருவது வழக்கம். கனமழை காரணமாக பூக்கள் சேதம் அடைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினார்கள்.

English summary
All the essential items rate increased in Chennai due to heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X