For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் மீண்டும் 1997 போன்ற நிலையை உருவாக்க இந்துத்துவ சக்திகள் களமிறங்கியது ஏன்? ஆளூர் ஷாநவாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் மீண்டும் 1997 போன்ற நிலையை உருவாக்க இந்துத்துவ சக்திகள் களமிறங்கியது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார், மர்மநபர்கள் சிலரால் வியாழக்கிழமை இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவையில் பெரும் வன்முறை வெடித்தது. கடைகள், வணிக நிறுவனங்கள், பேருந்துகள் கல் வீசி தாக்கப்பட்டன. இந்நிலையில் கோவையில் மீண்டும் 1997 போன்ற நிலையை உருவாக்க இந்துத்துவ சக்திகள் களமிறங்கியது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Alur Shanawaz facebook status about Coimbatore riot

இதுதொடர்பாக ஷாநவாஸ் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:

இந்துத்துவா கும்பல் வன்முறை செய்ததற்கு இரு நாட்களுக்கு முன்னர்தான் கோவையில் ஒரு இந்துப் பெரியவரின் இறப்பை முஸ்லிம்கள் பள்ளிவாசல் அறிவிப்புப் பலகையில் வெளியிட்டு, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வலு சேர்த்தனர். அது மிகப்பெரும் செய்தியாகவும் மாறியது.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வார்கள்; ஆனால், இந்து முஸ்லிம் ஒற்றுமை என்றால் சகிக்கவே மாட்டார்கள். கோவையில் மத முரண்பாடுகள் நீடித்தால்தான் அவர்களின் இருப்பை தக்கவைக்க முடியும். மத நல்லிணக்கம் ஓங்கினால், அதுவே ஆர்.எஸ்.எஸ்.ஸின் சவக் குழியாகிவிடும். எனவே, சாமி ஐயர் எனும் இந்துப் பெரியவரின் மரணத்தை கண்டு முஸ்லிம்கள் துயரமடைவது ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கு ஆகவே ஆகாது. அதனால்தான் இந்த வன்முறைகள்.

Alur Shanawaz facebook status about Coimbatore riot

காந்தி கொலை, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு - இவை அனைத்திலும் கைது செய்யப்பட்டவர்கள் இந்துத்துவ கும்பலே. ஏனேனில், காந்தி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாளை அர்பணித்த தலைவர். அஜ்மீர் தர்கா என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் சங்கமிக்கும் இடம். சம்ஜவ்தா ரயில் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவின் குறயீடாக ஓடும் ரதம். இப்போது சொல்லுங்கள், ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமா? இந்திய நாட்டுக்கு எதிரான இயக்கமா? என்று அவர் கூறியுள்ளார்.

English summary
VCK party, state deputy general secretary, alur Shahnawaz facebook status about Coimbatore riot
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X