For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணைக்கவரும் கண்காட்சி!… கண்டு ரசித்த பார்வையாளர்கள்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: அழகான ஓவியங்கள் வரையப்பட்ட குட்டிச்சிறுவன் சிலை... கம்பீரமாய் கால் மடக்கி அமர்ந்திருக்கும் நந்தி,சின்னச் சின்ன உருவங்கள் வரையப்பட்ட சட்டைகள் என கண்ணைக் கவரும் இந்த ஓவியங்கள் கோவையில் நடைபெற்ற கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த கலைநயம்மிக்க கண்காட்சி கோவையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் நாடுமுழுவதிலும் இருந்தும் 60க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 100க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுருந்தன. இந்த கலைக் கண்காட்சிக்கு கீதா மேஹ்ரா ஏற்பாடு செய்திருந்தார்.

{ventuno}

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கலைப்படைப்புகள் பார்வையாளர்களை வசீகரித்தன. இந்த கண்காட்சியில் பல்வேறு கலைஞர்களின் அருமையான கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார் கண்காட்சி ஏற்பாட்டாளர் கீதா

காகிதம், மரம், வெண்கலம், பிளாஸ்டிக், உடைந்த கண்ணாடிகள், களிமண் ஆகியவற்களால் செய்யப்பட்ட பலஅருமையான படைப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்ணாடியில் வரையப்பட்ட பாம்பு, ஆடைகளில் வரையப்பட்ட உருவங்கள். கண்ணாடி ஓவியங்கள், சிலைகள் என அற்புத படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

வலாய் ஷிண்டே என்பவரின் கலைப் படைப்புகள் பிரமிக்க வைத்தன. சமூகத்திற்கு உதவும் பலருக்கு மரியாதை செய்யும் வகையிலான படைப்புகளாக ஷிண்டேயின் கலை வடிவங்கள் காட்சி தந்தன.

இங்கு வைக்கப்பட்டிருந்த கலைப்படைப்புகள் அனைவரையும் கவர்ந்திழுத்தன என்பதில் ஆச்சரியம் இல்லை. இதுபோன்றதொரு கண்காட்சியை தமிழகத்தில் காண்பது இதுதான் முதல்முறை என்று கூறினார் பார்வையாளர் ஒருவர். இந்த கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது.

English summary
A three-day exhibition on contemporary work displaying a vast range of artistic practice left visitors spellbound in Tamil Nadu. The exhibition is unique as it displays more than 100 exhibits of nearly 60 talents from across the country. The organiser of the exhibition, Geetha Mehra, said that the exhibition covers a wide range of art works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X