For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசியில் நடந்தது போலவே செங்கல்பட்டிலும்.. திடீரென மளமளவென தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    தென்காசியில் நடந்தது போலவே செங்கல்பட்டிலும்.. திடீரென மளமளவென தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்

    செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் கொண்ட மூதாட்டிக்கு எக்ஸ்ரே எடுக்க 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் உதவியாளர் அம்பிகா ஆகியோர் இருந்தனர்.

    Ambulance vehicle caught in fire in Chengelput

    இந்த நிலையில் வாகனத்தில் இருந்த போது எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக செல்வகுமாருக்கும் அம்பிகாவுக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

    ஒரு வேளையில் இதில் யாரேனும் நோயாளிகளை இடமாற்றம் செய்த போது தீவிபத்து ஏற்பட்டிருந்தால் அசம்பாவிதச் சம்பவம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    Ambulance vehicle caught in fire in Chengelput

    இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

    ஈரானில் ராஜ்நாத்சிங்- பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் சந்திப்புஈரானில் ராஜ்நாத்சிங்- பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் சந்திப்பு

    இதே போல் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை இடமாற்றம் செய்யும் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. வாகன ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு நோயாளியை வாகனத்தில் இருந்து வெளியேற்றிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    English summary
    Ambulance vehicle caught in fire in Chengelput District Government Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X