For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்பூர் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் 2 பேர் பலி... தலைமை மருத்துவர் ஷர்மிளா மாற்றம்

ஆம்பூர் மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் 2 பேர் பலியான விவகாரத்தில் தலைமை மருத்துவர் ஷர்மிளா மாற்றப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தலைமை மருத்துவர் ஷர்மிளா மாற்றம் செய்யப்பட்டார்.

வேலூர் அருகே கார் விபத்தில் சிக்கியதில் படுகாயங்களுடன் ராஜ்குமார் என்பவரும், நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்காக 13 வயது சிறுமி ஒருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உள்பட இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

Ambur GH's Chief Doctor transferred

இந்நிலையில் விபத்தில் சிக்கிய மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக காத்திருந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் மருத்துவமனை கேட்டை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி, தலைமை மருத்துவராக இருந்த ஷர்மிளாவை இடம் மாற்றம் செய்துள்ளார். அவருக்கு பதில் தலைமை மருத்துவராக கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Doctors was not available at Ambur Govt Hospital, so 2 were died. Today the chief doctor got transferred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X