For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா இல்லாத வாழ்க்கையா.. முடியலை... தண்டவாளத்தில் பாய்ந்து.. தலையைக் கொடுத்த கணவர்!

ரயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: சசிகலா இல்லாமல் வாழவே முடியவில்லை.. அதனால் பைக்கை எடுத்து கொண்டு நேராக ரயில்வே ஸ்டேஷன் போய், அங்கிருந்த தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டு.. உயிரையும் விட்டுவிட்டார் கணவர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ளது நாச்சியர்குப்பம்.. இங்கு வசித்து வந்தவர் ராஜேஷ்.. 34 வயதாகிறது.. ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவிதான் சசிகலா.. அவருக்கு 33 வயதாகிறது.. மேனேஷ் என்று 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.

ambur man committed suicide in train

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக சசிகலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்... இந்த திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போய்விட்டார் ராஜேஷ்.. மனைவியின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்... கதறி அழுதவாறே அடக்கமும் செய்தார்.

ஆனால், அன்றிலிருந்தே அழுது கொண்டே இருந்தார்.. ஒருக்கட்டத்தில் வேதனை அதிகமாகி ராஜேஷ் மனைவியிடமே போய்விடலாம் என்று முடிவெடுத்துவிட்டார்.. அதற்காக கண்ணடிகுப்பம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பைக் ஓட்டிகொண்டு வந்தார்.

ராவணன் ஸ்டைலில்...சிவாஜி சிலை நீக்கம்...போலி பாஜக...சாம்னாவில் சிவசேனா விளாசல்!!ராவணன் ஸ்டைலில்...சிவாஜி சிலை நீக்கம்...போலி பாஜக...சாம்னாவில் சிவசேனா விளாசல்!!

ஒரு ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு, தண்ணி அடிக்க ஆரம்பித்தார்.. அளவுக்கு அதிகமாக குடித்துமுடித்தார்.. பிறகு தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டார்.. அந்த வழியாக பெங்களூரு - சென்னை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்..

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், தலை துண்டாகி கிடந்த சடலத்தை கண்டு அலறி அடித்து கொண்டு ஓடினர்.. உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து ராஜேஷ் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
ambur man committed suicide in train due to family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X