For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் அதிகாரத்திற்கு அடங்க மறுக்கும் கேரள போலீஸ்... தமிழ்நாட்டுல முடியுமா?

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கேரள முதல்வரின் கருத்துகளை பற்றி பொருட்படுத்தாமல் நடிகர் திலீப் தான் குற்றவாளி என்பதை நிரூபித்துள்ளது

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அண்டை மாநிலமான கேரளாவில் அரசுக்கு அடங்காமல் குற்றத்தை நிரூபிக்கும் போலீசாரின் 'கட்ஸ்' போல தமிழக போலீசார் செயல்படுவார்களா என்று மக்கள் ஆதங்கப்படத் தொடங்கியுள்ளனர்.

சினிமாத் துறையில் இந்த நடிகருடன் அந்த நடிகை நெருக்கம், பிரேக் அப், புது பழக்கம் என்றே கேள்விபட்ட நிலையில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள திரைத்துறையிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியாக அரசியல் ரீதியிலும் இந்த சம்பவம் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரின் சப்போர்ட்டு இருந்தாலும், நடிகர் திலீப் தன்னை திட்டமிட்டே மீடியாக்கள் கட்டம் கட்டுவதாகக் கூறினார். மேலும் வழக்கு தன்னை குறி வைத்தே நகர்வதாகவும் கைதுக்கு முன்னர் கூறியிருந்தார்.

 சதியில்லை என சொன்ன முதல்வர்

சதியில்லை என சொன்ன முதல்வர்

முதல்வர் பினராயி விஜயனும் பாவனாவை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்று கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று கூறினாலும், பாலியல் துன்புறுத்தலுக்கு சதி காரணமாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று மறைமுகமாக நடிகர் திலீப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய இந்த கருத்துக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியிருந்தார்.

 நிரூபித்த போலீஸ்

நிரூபித்த போலீஸ்

இருந்தாலும் இவற்றையெல்லாம் அசட்டை செய்யாத கேரள காவல்துறையினர் நடிகர் திலீப் தான் குற்றவாளி என்பதற்கான 19 ஆதாரங்களை சேகரித்தனர். முதலில் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மறுத்த திலீப் போலீசாரின் ஆதாரங்களைக் கண்டு வாய்திறக்க முடியாமல் சிறைக் கம்பிகளை எண்ணி வருகிறார்.

 நியாயமமாக செயல்பட்டவர்கள்

நியாயமமாக செயல்பட்டவர்கள்

இந்த சம்பவத்தில் நாம் உணர வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் என்னதான் முதல்வர் பினராயி விஜயன் பாவனா சம்பவத்தில் சதியில்லை என்று சொன்னாலும் அதற்காக வழக்கை அப்படியே விட்டுவிட்டு கிடைத்தவர்கள் மீது வழக்கை போட்டு கேஸை முடிக்காமல் நியாயமான முறையில் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடு தான் முக்கியம்.

 மக்கள் ஏக்கம்

மக்கள் ஏக்கம்

தமிழக போலீசாரும் கேரள போலீசாரைப் போல, அரசியல்வாதிகள் நெருக்கடிகளுக்கு கட்டுப்படாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மேலும் பிரபலம் ஆள்பலம், பணபலம் உள்ளவர் என்பதையெல்லாம் பார்க்காமல் தமிழக போலீசும் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

English summary
Kerala police proves legend actor Dilip is the key planner behind Bavana molestation case amidst Government's pressure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X