For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்கு வந்த அமித்ஷாவின் நோக்கம் இதுதானாம்... நோக்கம் நிறைவேறுமா?

சென்னைக்கு அமித்ஷா வந்ததே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்காக என்று கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷா சென்னை வந்த காரணம் இதுதான்- வீடியோ

    சென்னை: சென்னைக்கு அமித்ஷா வந்ததே வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

    லோக்சபா தேர்தல் பற்றி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழகம் வந்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. இன்று 12 மணிக்கு லோக்சபா தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    Amit Shah meets Loksabha Toli in Chennai

    இதையடுத்து மாலை 3.30 மணிக்கு லோக் சபா தேர்தலின் பொறுப்பாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் தமிழக பாஜகவின் மகா சக்தி கேந்திர மற்றும் சக்தி கேந்திரம் ஆகியவற்றின் பொறுப்பாளர்களை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து புதுவையில் உள்ள லோக்சபா பாஜக நிர்வாகிகளையும் இரவு 10 மணிக்கு அந்தமான் லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களையும் சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி செல்கிறார்.

    இதனிடையே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித்ஷாவே திரும்பி போ என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்து அதை டிரென்டாக்கியது குறிப்பிடத்தக்கது. மோடி சென்னை வரும் போதும் இதே போன்ற எதிர்ப்பு இருந்தது.

    English summary
    BJP Chief Amit Shah arrives to Chennai and meet with Lok Sabha Toli and discuss about to strengthen the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X