For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக தலைமை.. முதல்வர் பதவி.. ரஜினியை வைத்து வித்தியாசமாக காய் நகர்த்தும் அமித் ஷா!

தமிழக முதல்வராக ரஜினியும், மீண்டும் நாட்டின் பிரதமராக மோடியும் வர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    செல்லூர் ராஜூ சொல்வதை நம்பவே முடியாது- வீடியோ

    சென்னை: தமிழக முதல்வராக ரஜினியும், மீண்டும் நாட்டின் பிரதமராக மோடியும் வர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    தமிழக அரசியல் களத்தில் ரஜினி மீண்டும் பரபரப்பாகி இருக்கிறார். ரஜினி அதிமுகவில் சேரப்போகிறாரா என்ற கேள்வி திடீர் என்று பலருக்கு எழுந்து இருக்கிறது.

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த அரசியல் நிகழ்விற்கு பின் அமித் ஷா இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    தொடக்க திட்டம் என்ன

    தொடக்க திட்டம் என்ன

    தொடக்கத்தில் ரஜினி தனி கட்சி தொடங்குவதாகவே இருந்தது. ரஜினி தனி கட்சி தொடங்கி அதை பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்க வைப்பதே, பாஜகவின் திட்டமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பாஜக பெரிய அளவில் வரவேற்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    தொடங்க முடியாது

    தொடங்க முடியாது

    ஆனால், சில அரசியல் நிலவரங்களை பார்த்துவிட்டு புதிதாக கட்சி தொடங்கும் எண்ணத்தை ரஜினி கைவிட்டு இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இனி ஒரு கட்சி தொடங்கி அடுத்த தேர்தலுக்குள் தமிழகம் முழுக்க பிரபலம் அடைவதும், சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் இயலாத காரியம் என்று ரஜினியும், அமித் ஷாவும் நினைப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    தலைவராகிறாரா

    தலைவராகிறாரா

    இதனால் ரஜினியை அதிமுகவின் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்போதைக்கு அப்படிப்பட்ட திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த வருட இறுதியில் அப்படி சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதிமுகவை சேர்ந்த மா.பா. பாண்டியராஜனே இதற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    அமித் ஷா திட்டம்

    அமித் ஷா திட்டம்

    அமித் ஷா தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்த வித்தியாசமான திட்டம் வைத்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். அப்போது தமிழகத்தில் முதல்வராக ரஜினியை அமர்த்த வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாக டெல்லி அரசியல் புள்ளிகள் தெரிவிக்கிறார்கள். இதனாலேயே அவரை அதிமுகவில் சேர வைக்க திட்டம் நடக்கிறது.

    ஒன்றாக சந்திக்க திட்டம்

    ஒன்றாக சந்திக்க திட்டம்

    அதோடு அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே அமித் ஷா, சில வாரங்களுக்கு முன்பாக தமிழகம் வந்தார் என்றும் அரசியல் புள்ளிகள் பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்து இரண்டு தேர்தலையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

    English summary
    Tamilnadu Politics once again gets into the fire after Rajini - ADMK merging plan comes into light. Rajini may join AIADMK party soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X