For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லி பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்களை பாஜகவில் சேர்த்த அமீத் ஷா...!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்களை மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லி பாஜகவில் சேர்த்தார் பாஜக தலைவர் அமீத் ஷா.

பாஜகவினர்தான் அக்கூட்டத்திற்குப் பொதுவாக வந்திருப்பார்கள். ஆனால் வந்தவர்களை மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லி அமீத் ஷா கட்சியில் சேர்த்ததால், வந்தவர்கள் ஒருவேளை பாஜகவினர் இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாஜக தலைவராக மாறிய பின்னர் அமீத் ஷா ஒவ்வொரு மாநிலமாக குறி வைத்து பாஜகவை பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று அவர் சென்னை வந்தார். சென்னை அருகே மறைமலைநகரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பல்துறைப் பிரமுகர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மிஸ்ட் கால் கொடுத்து

மிஸ்ட் கால் கொடுத்து

இந்த கூட்டத்தில் ஒரு கூத்தும் நடந்தது. அதாவது கூட்டத்திற்கு வந்த "பாஜகவினரை" மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லி பாஜகவில் சேர்த்தார் அமீத் ஷா.

போனை எடுங்க

போனை எடுங்க

அமீத் கூட்டத்தில் பேசும்போது கூட்டத்திற்கு வந்தவர்களைப் பார்த்து உங்களிடம் செல்போன் இருக்கும். அதை எடுங்கள் என்றார்.

இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுங்க

இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுங்க

பின்னர் 1800-266-2020 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுங்கள் என்றார்.

இப்ப நீங்க உறுப்பினராயிட்டீங்க

இப்ப நீங்க உறுப்பினராயிட்டீங்க

பின்னர் இப்போது உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும். நீங்கள் பாஜகவில் உறுப்பினராகி விட்டீர்கள் என்றார் அமீத் ஷா.

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

மேலும் அவர் கூறுகையில், தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. உங்களிடம் நான் வேண்டுவது எல்லாம் தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் பூத்துகளுக்கு சென்று பூத்துக்கு 100 பேர் வீதம் 60 லட்சம் உறுப்பினர்களை பா.ஜ.க.வில் சேர்க்க வேண்டும் என்றார் அமீத் ஷா.

அடேங்கப்பா...பிரமாதம்தான்!

English summary
BJP leader Amit Shah asked the cadres who came to hear his speech in a public meeting to join BJP by giving a missed call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X