For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மொழி தமிழாய்வு நிறுவன பணியாளர்களை மத்திய அரசு வெளியேற்ற துடிக்கிறது: வேல்முருகன்

செம்மொழி தமிழாய்வு நிறுவன பணியாளர்களை மத்திய அரசு வெளியேற்ற துடிக்கிறது என்று வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : செம்மொழி தமிழாய்வு நிறுவன பணியாளர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு அதை செயல்படுத்தாமல் தடுக்க மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுவருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதில் பணிபுரிய பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 13 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

amizhaga Valurimai Katchi Leader Velmurgan Condemns state and Central Government on Twitter

இதன் பிறகு 2012ம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் பணிபுரிய பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக 2012ம் ஆண்டு தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே இருக்கும் பணியாளர்களுக்கு பணிநிரந்தர ஆணை வழங்க கோரியும், புதிய பணியாளர்களை தேர்வு செய்வதற்கும் கடந்த அக்டோபர் மாதத்தில் தடை விதித்தது.

தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து சிலர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு உள்ளார். அதில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனப் பணியாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்காத தமிழக அரசையும், தனியார் வக்கீல்களுக்கு வாரியிறைத்து மேல்முறையீட்டின் மூலம் அப்பணியாளர்களையே அப்புறப்படுத்திவிடப் நடுவண் அரசு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Tamizhaga Valurimai Katchi Leader Velmurgan Condemns state and Central Government on Twitter. Both Governments is purposely delaying in Semmozhi Tamil Research Institute Workers job confirmation issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X