For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரினா பீச், மதுரை, திருச்சி, கோவை, சேலம் பஸ் நிலையங்களில் அம்மா வை-பை சேவை

சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்களில் வை-பை வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பேருந்து நிலையங்களில் வை-பை வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:

Amma free wi-fi zone at Marina beach to be expanded across TN

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வை-பை மண்டலங்களை முதல்வர்எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

அம்மா 'வை-பை' மண்டலங்களில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் 'வை-பை' வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has Amma wi-fi zones at five places in the state, including Marina beach in Chennai. The four other places include Central bus stand at Trichy, Gandhipuram bus stand at Coimbatore, Mattuthavani MGR bus stand at Madurai and central bus stand at Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X