For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருவுற்ற தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பொக்கிஷம்: ஜெயலலிதா அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கருவுற்ற தாய்மார்களின் உடல் நலனைப் பேணும் வகையில் 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், இந்த முக்கியத் திட்டத்தை அறிவித்தார்.

11 வகை மூலிகைகள்

11 வகை மூலிகைகள்

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மசக்கை வாந்தி தடுக்க

மசக்கை வாந்தி தடுக்க

மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும் கருவேப்பிலை பொடி அளிக்கப்படும்

இரும்புச்சத்து அதிகரிக்க

இரும்புச்சத்து அதிகரிக்க

அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்பு சத்து மற்றும், வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவை அளிக்கப்படும்.

கடைசி மூன்று மாதங்கள்

கடைசி மூன்று மாதங்கள்

கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும்; சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம்.

அம்மா மகப்பேறு சஞ்சீவி

அம்மா மகப்பேறு சஞ்சீவி

ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம், குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.10 கோடி செலவில்

ரூ.10 கோடி செலவில்

இந்த மருந்துகள், சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்தர மருத்துவ சேவை

உயர்தர மருத்துவ சேவை

நான் இது வரை அறிவித்த திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேலும் சிறந்து விளங்கவும், அதன் மூலம் தரமான உயர்தர மருத்துவச சேவை தங்கு தடையின்றி, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவும், ஒளிபடைத்த தமிழகம் உருவாகவும் வழிவகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்

அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்

கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின் போது ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய ‘‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்'', அதாவது அம்மா பேபி கேர் கிட் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த பெட்டகம், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்பு துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்பு பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சவுபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும். இந்த ஆண்டு அம்மா மகப்பேறு சஞ்சீவி மூலிகைப் பெட்டகத்தை அறிவித்துள்ளார்.

English summary
Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new Health schemes for the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X