For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா திட்டங்களால் மட்டுமே தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிடாது: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தினந்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டுமே தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிடாது என்று வைகோ கூறியுள்ளார்.

Amma scheme not growth in TN economy says Vaiko

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்றவருமான ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு உரிமை கோரும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பல்நோக்குக் குறியீடு (Multi Dimentional Index -MDI) மதிப்பீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு இக்குழு உருவாக்கப்பட்டது.

ரகுராம் ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கை 2013, செப்டம்பர் 26ல் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. கடந்த அறிக்கையில், இநதியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த 7 மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருந்ததாகவும், பஞ்சாப், மராட்டியம், உத்ரகாண்ட், ஹரியானா போன்றவை இதர வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் கடைசி

தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்சசி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடைத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி

2013, செப்டம்பரில் ரகுராம்ராஜன் குழு அறிக்கையில், பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய புள்ளியியல் நிறுவனம், பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.73 விழுக்காடு என்றும், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறுகிறது.

ஜிடிபி சரிவு

2011-12ல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.39 விழுக்காடு இருந்தது. 2012-2013ல் 3.39 விழுக்காடு என்று வீழ்ச்சி அடைந்துவிட்டது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சேவைத்துறை 45 விழுக்காடு, தொழில்துறை 34 விழுக்காடு, விவசாயத்துறை 21 விழுக்காடு பங்களிப்பை அளிக்கின்றன.

விவசாயத்துறை வீழ்ச்சி

முதன்மை துறையாக உள்ள விவசாயத்துறை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையும் சரிந்துவிட்டது. கடந்த மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது.

ரூ.5000 கோடி இழப்பு

தென் இந்தியாவின் மான்செஸ்டர் கோவையில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் மின்வெட்டு. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாயின. கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அங்கு தொழிற்துறை உற்பத்தியை இழந்தது.

மனித வளம்

இந்திய மனித வளர்ச்சி குறியீட்டு எண் மதிப்பீட்டில் முதல் மூன்று மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. மனித வளம் சிறப்பாக உள்ள தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

விவசாயநிலங்கள் விற்பனை

பயிரிடப்படும் நிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே போவதும், நல்ல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்தும், நீர் ஆதாரங்களைப் பெருக்க ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக தூர்வாரியும் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்துறையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பை ஆதிகரிக்க வேண்டும்.

இலவச திட்டங்கள்

தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1.27 லட்சம் கோடி ரூபாயில், இலவச திட்டங்களுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக்கடைகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது.

அம்மா திட்டங்கள்

ஜெயலலிதா அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளும், நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko said, Amma schemes and free schemes not development in Tamil Nadu economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X