For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்திரி முடிந்தும் கலங்கடிக்கும் வெயில்- அச்சுறுத்தும் அம்மை நோய்!

Google Oneindia Tamil News

நெல்லை: அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் தொடர்ந்து அடித்து வருவதால் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இநத ஆண்டு மே மாதம் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைநது காணப்பட்டது. ஆனால் அக்னி நடசத்திரம் முடிந்து விட்ட போதிலும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.

Ammai spreads in TN

வீட்டில் ஒருவருக்கு அம்மை நோய் தாக்கினால் இது மற்றவர்களுக்கும் பரவுகிறது. இதில் சிறுவர், சிறுமியர் அம்மை நோய் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதார துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுககு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க வேண்டும், தற்போது பள்ளிகள் திறந்து விட்டதால் பள்ளி நிர்வாகம், பெற்றோர் மத்தியில் அம்மை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழி்முறைகள் குறித்தும், மருத்துவ குழுவினர் நேரில் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

English summary
Due to the extended summer in the state, Ammail disease is spreading in various places like Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X