For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த தினகரன்.. ஷாகுல் ஹமீதுவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ்!

அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் ஷாகுல் ஹமீது அறிவிக்க என்ன காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    TN By Election: AMMK Candidates: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன்

    சென்னை: அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு எதிராக களமிறங்கி உள்ள அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது யார்? இவரை நிறுத்தக் காரணம் என்ன என்பதே அரசியல் வட்டாரத்தில் இப்போது ஹாட் டாபிக்!

    4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க போகிறது என்றாலும் அதில் முக்கியமாக பார்க்கப்படுவது அரவக்குறிச்சிதான். காரணம் செந்தில்பாலாஜிதான்!

    திமுகவிலிருந்து அதிமுக, அமமுகவுக்குப் போய் விட்டு மீண்டும் திமுகவிலேயே ஐக்கியமானவர்.. இவரைதான் திமுக அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.

    கட்சியாக மாறிய பின் முதல் சவால்.. 4 தொகுதி இடைத் தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன்கட்சியாக மாறிய பின் முதல் சவால்.. 4 தொகுதி இடைத் தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன்

    ஏக கடுப்பு

    ஏக கடுப்பு

    இதனால் மற்ற 2 கட்சிகளும் செம காண்டில் உள்ளன. தங்கள் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டாரே செந்தில்பாலாஜி என்று ஏக கடுப்பில் உள்ளனர். அத்துடன், தொகுதியில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு பற்றியும் அக்குவேரு ஆணிவேராக தெரியும் என்பதால், பலமான வேட்பாளரைதான் நிறுத்த வேண்டும் என்று அதிமுக, அமமுக தரப்பு எப்போதோ முடிவு செய்துவிட்டது.

     சாகுல் ஹமீது

    சாகுல் ஹமீது

    இதில் தினகரன் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட்டு வேட்பாளரை அறிவித்துள்ளார். அவர் பெயர் சாகுல் ஹமீது. உண்மையிலேயே தினகரனின் இந்த சாய்ஸ் பாராட்டத்தக்கது. தினகரனின் பக்குவத்திற்கு மற்றொரு உதாரணம்தான் இந்த வேட்பாளர் சாய்ஸ்!

    கவுண்டர்கள்

    கவுண்டர்கள்

    ஏனென்றால் தினகரனுக்கு இது மானப்பிரச்சனை. அரவக்குறிச்சியில் கவுண்டர் சமூகத்தவர் அதிகமாக உள்ளனர் என்றாலும், பள்ளப்பட்டி உள்பட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கின்றனர். அதாவது சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் இங்கு உள்ளதால், இவர்களது வாக்குகளை வளைக்கவே சாகுல் ஹமிதை நிறுத்தியுள்ளார் தினகரன். அது மட்டும் இல்லை.. இவர் செந்தில்பாலாஜிக்கு பரம எதிரி என்றும் சொல்லப்படுபவர். அதனால் இருவருக்கும் செம டஃப் காத்திருக்கிறது.

    வேட்பாளர் யார்?

    வேட்பாளர் யார்?

    திமுக, அமமுக இருவருமே பலமுள்ளவர்களை நிறுத்தி உள்ளதால், தாங்களும் அப்படி ஒரு சாய்ஸ்-ல் வேட்பாளரை நிறுத்த அதிமுக மண்டையை போட்டு குடைந்து யோசித்து வருகிறது. இன்று அரவக்குறிச்சி வேட்பாளரை முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    There is a tough fight between AMMK Candidate Shahul Hameed and DMK Senthil Balaji in Aravakurichi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X