For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவதிகையில் வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்.. அமமுக சின்னம் பட்டன் உடைந்ததால் பரபரப்பு

Google Oneindia Tamil News

பண்ருட்டி: தமிழகத்தில் வேலூரை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இது தவிர 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை அமைதியாக நடந்து வருகிறது.

AMMK logo button broken in voting machine near Panruti

இதனிடையே கடலூர் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தற்காலிகமாக வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்தில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் காசி. தங்கவேல் பெயருக்கு நேராக இருந்த பட்டன் உடைந்து விட்டது.

பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்.. ஒன்றும் புரியாமல் தவிக்கும் வாக்காளர்கள்.. புதிய பிரச்சனை! பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்.. ஒன்றும் புரியாமல் தவிக்கும் வாக்காளர்கள்.. புதிய பிரச்சனை!

இதனால் வாக்காளர்கள் அந்த பட்டனை உபயோகிக்க இயலாத சூழல் உருவானது. அமமுக சின்னம் உள்ள பட்டன் உடைந்ததால் வாக்குப்பதிவு 1 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

English summary
The voting record has been temporarily suspended at a polling station set up in Thiruvathai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X