For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.. அம்ருதா வேண்டுகோளுக்கு விடை என்ன?

அம்ருதா புகார் முக்கியத்துவம் பெற்றது. தைரியமாக அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னைத்தான், ஜெ. மகள் என அறிவிக்க வேண்டும் என கோரியதோடு, மரபணு சோதனைக்கும் தயார் என கூறினார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.

    சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இல்லை என அப்பல்லோ மருத்துவமனை கூறியிருப்பதன் மூலம், அம்ருதா என்ற பெண் அவரது மகள் என கூறி தொடர்ந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    அம்ருதாவின் கோரிக்கைக்கு இன்னும் விடை கிடைக்காத சூழல் இதன் மூலம் உருவாகியுள்ளது.

    ஜெயலலிதா மறைந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    உறவுக்கார பெண்மணி

    உறவுக்கார பெண்மணி

    ஜெயலலிதாவின் உறவினர் லலிதா, இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பேட்டியளித்தார். பெங்களூரை சேர்ந்த லலிதா அளித்த பேட்டியில், நடிகர் சோபன் பாபு மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து குடும்பம் நடத்தியதாகவும், அதன் காரணமாக ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், தனது பெரியம்மாதான், ஜெயலலிதாவுக்கு பேறுகாலம் பார்த்ததாகவும், லலிதா கூறினார்.

    அம்ருதா

    அம்ருதா

    லலிதாவின் பேட்டியை வைத்து பார்த்தால், அம்ருதாதான் அந்த பெண் குழந்தையா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்தது. லலிதாவிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, அம்ருதாதான் அந்த பெண் குழந்தையா என தெரியாது என்றபோதிலும், ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது நிஜம் என்று கூறினார்.

    தைரியமான வழக்கு

    தைரியமான வழக்கு

    இந்த பின்னணி அடிப்படையில்தான் அம்ருதா புகார் முக்கியத்துவம் பெற்றது. தைரியமாக அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னைத்தான், ஜெ. மகள் என அறிவிக்க வேண்டும் என கோரியதோடு, மரபணு சோதனைக்கும் தயார் என கூறினார். இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒருவரை, ஒரு கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக கொண்ட கட்சியின் நம்பிக்கைக்குரிய ஒருவர் பற்றி இவ்வாறு ஒரு வழக்கு தொடர அம்ருதா எளிதில் முடிவெடுத்திருக்க முடியாது.

    அம்ருதாவிற்கு பதில் என்ன?

    அம்ருதாவிற்கு பதில் என்ன?

    இந்த சூழ்நிலையில்தான், மரபணு சோதனை பற்றிய அம்ருதா கோரிக்கை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை, ஜெ. ரத்த மாதிரி இல்லை என கை விரித்துள்ளது. மிகவும் பிரபலமான ஜெ. ரத்த மாதிரி இல்லை என அப்பல்லோ ஏன் கூறியது என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த விஷயத்தில் அம்ருதாவின் வேண்டுகோள் என்பது விடை காணப்படாத புதிராகிவிட்டது. இனி ஹைகோர்ட் என்ன மாதிரி உத்தரவுகளை பிறப்பிக்கப்போகிறது என்பதை மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர்.

    English summary
    Why Amrutha's claim over Ex CM Jayalalitha, has to resolve in the society?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X