For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அமுல் பேபி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமுல் நிறுவனத்தின் குட்டிப் பெண் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவருடைய உடலுக்கு குடியரசுத் தலைவர் முதல் அடிமட்ட தொண்டன் வரை, லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்து, செய்தி வெளியிட்டது.

அமுல் நிறுவனத்தின் அட்டர்லி பட்டர்லி கார்டூனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கள் தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமுல் கார்ட்டூன்

அமுல் கார்ட்டூன்

இந்தியாவின் பிரபலமான பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக அமுல் தனது கார்டூனில் பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி கார்ட்டூன் வெளியிடுவது வாடிக்கை. வெள்ளத்தின் போது அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதைக் கூட கிண்டல் அடித்தது அமுல்.

தோழி சசிகலா

தோழி சசிகலா

ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் இணைபிரியா தோழிகள், சிறைக்கும் இணைபிரியாமல் சென்றதை அமுல் விளம்பரப்படுத்தியது. ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தது அமுல் பேபி.

துக்கம் அனுசரிக்கும் அமுல்

துக்கம் அனுசரிக்கும் அமுல்

பல்வேறு சமயங்களில் ஜெயலலிதான் சாதனைகள், நிகழ்வுகள் குறித்தும் அமுல் நிறுவனம் கார்டூன் படங்களை வெளியிட்டு பிரபலப்படுத்தியது. ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துக்கம் அனுசரித்து கறுப்பு நிற கார்டூன் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அம்மாவிற்காக துக்கம்

அம்மாவிற்காக துக்கம்

அமுல் பேபி விளம்பரம் எப்போதுமே கிண்டல், கேலி, வாழ்த்து, மகிழ்ச்சி தரும் வகையிலும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும்தான் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்காக தமிழகமே கண்ணீர் விட்டது. எப்போது மகிழ்ச்சியாக காணப்படும் அமுல் பேபியும் துக்கம் அனுசரிக்கிறது.

English summary
Tamil Nadu’s Amma J Jayalalithaa, took her last breath on December 5 and the whole nation mourned her death. one tribute that won Internet’s heart – from the Amul Girl herself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X