For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவரை 35 பேரின் உயிரை குடித்த ஏ.என்.32 ரக விமான விபத்துகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏ.என்.-32 ரக ராணுவ சரக்கு விமானம் மாயமாகியுள்ளது. முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு இதே ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு கிளம்பிய விமானப்படை விமானம் ஏ.என்.-32 மாயமாகியுள்ளது. விமானம் கடலில் விழுந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து விமானத்தை வங்கக் கடலில் தேடும் பணி நடந்து வருகிறது.

ஏ.என்.-32 விமானம்

ஏ.என்.-32 விமானம்

இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களிலேயே ஏ.என்.-32 ரக விமானம் தான் மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. தற்போது விமானப்படையில் சுமார் 100 ஏ.என்.-32 ரக விமானங்கள் உள்ளன.

ரஷ்யா

ரஷ்யா

125 ஏ.என்.-32 ரக விமானங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன. இரண்டு என்ஜின்கள் அடங்கிய இந்த ரக விமானம் மோசமான வானிலையிலும் தடுமாறாமல் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ஏ.என்.-32 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 13 பேரும் பலியாகினர். என்ஜின் கோளாறால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

டெல்லி

டெல்லி

அருணாச்சல பிரதேச விபத்திற்கு முன்னதாக 1999ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி அருகே ஏ.என்.-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 22 பேர் பலியாகினர்.

English summary
So far 35 people have died in crashes involving AN-32 aircrafts bought from Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X