For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி.. திடீர் பரபரப்பு!

சென்னையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ரெஜூஸ் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

குமரி: சென்னையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ரெஜூஸ் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜூஸ் என்பவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு சென்ற ரெஜூஸ் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கிறார்.

An ADMK member attempts suicide in front OPS house

அதன்பின் கையில் வைத்து இருந்த விஷ பாட்டிலை குடிக்க முடிவெடுத்து குடிக்க சென்று இருக்கிறார். அப்போது அங்கு இருந்த, அதிமுகவினர், அவரை தடுத்து பாட்டிலை தூக்கி எறிந்தனர், அதன்பின் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து உடனே அவரை மாத்திரைகளை வாந்தி எடுக்க வைத்தனர்.

இந்த நிலையில் அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவருக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று அவரே பேட்டியளித்துள்ளார்.

அதில், அதிமுகவில் தளவாய் சுந்தரம் தலையீடு அதிகமாக உள்ளது. குமரி மக்களுக்கு அவர் எந்த நல்லதும் செய்ய விடுவதில்லை. நான் அதிமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறேன். நான் மக்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டு கட்சி மூலம் அதை மக்களுக்கு கொண்டு வந்தால், அதை தலைவாய்சுந்தரம் தடுக்கிறார்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாங்கி தர ஏற்பாடு செய்தேன். இதற்காக முதல்வரிடம் பேசினேன். ஆனால் அதற்கும் தளவாய் சுந்தரம் முட்டுக்கட்டை போட்டார். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.

இதுகுறித்து முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் பல முறை புகார் அளித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்போது, நேரடியாக தற்கொலை செய்ய களமிறங்கிவிட்டேன் என்றுள்ளார்.

English summary
An ADMK member named Regis attempts suicide in front Deputy CM OPaneerselvam Selvam house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X