For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏண்டா அவரே பாவம் ஒரு "விஐபி".. அவரைப் போய் "அதுக்கு" கூப்பிட்டா எப்படி??

சென்னையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் விபசாரத்துக்கு அழைத்ததாக புகார் எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர் ஒருவரை விபசாரத்துக்கு அழைத்ததாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சில டுபாக்கூர் நிறுவனங்கள் இளைஞர்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

வேலைவாய்ப்புகள் என இணையதளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி ஏராளமான இளைஞர்கள் தங்கள் பணத்தை இழக்கும் அபாயமும் நடக்கிறது.

புகார்

புகார்

சென்னை மாநகர போலீஸில் பாலாஜி என்ற இளைஞர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை புகாராக அளித்துள்ளார். 8-ஆம் வகுப்பு படித்திருக்கும் இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விளம்பரம்

விளம்பரம்

மேலும் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இணையத்தளத்தில் தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளார். அப்போது ஒரு விளம்பரம் வந்ததை பார்த்துவிட்டு போன் செய்துள்ளார். அவரிடம் பேசிய ஒரு பெண் ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பணம் கட்டியவுடன் வேலை வாங்கித் தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

நம்பிய இளைஞர்

நம்பிய இளைஞர்

இதை நம்பிய பாலாஜி சிறுக சிறுக பணம் சேர்த்து கருணாமூர்த்தி என்பவரின் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தினார். இதையடுத்து அந்த பெண்ணிடம் என்ன வேலை என்று கேட்டபோது கால்பாய் வேலை என்று கூறியிருக்கிறார். இதனால் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.

புகார் மீது நடவடிக்கை

புகார் மீது நடவடிக்கை

ஏமாற்றப்பட்ட நிறுவனத்தை நேரில் சென்று அணுகிய போதும் பணம் கிடைக்கவில்லை. முன்பு பேசிய தொலைபேசி எண்ணில் முயற்சித்தபோதும் பலன் கிடைக்கவில்லை. அந்த தனியார் நிறுவனம் தன்னைப் போல் பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளதாக கூறிய பாலாஜி, போலி நிறுவனங்களை கண்டுபிடித்து களைந்தால் மட்டுமே இளைஞர்கள் தவறான வழிக்கு அழைத்துச் செல்லப்படுவதை தடுக்கமுடியும் பாலாஜி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Chennai based youth gives complaint against the company who calls him for call boy job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X