For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனத்துறை அமைச்சராக பதவியேற்றார் ஆனந்தன்: ஜெ. பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அப்போது, தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

Anandhan sworn in as TN minister

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக அவர் பதவியேற்றார். இதையடுத்து அமைச்சரவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, வனத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு மீண்டும் பதவி வழங்கப்படவில்லை.

கடந்த மே மாதம் தமிழக அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டார் எம்.எஸ்.எம்.ஆனந்தன். இந்நிலையில், இன்று மீண்டும் வனத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

ஆனந்தனின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆனந்தனுக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

English summary
Newly inducted minister in J Jayalalithaa's Cabinet, M S M Anandhan, was sworn-in at a function at Raj Bhavan here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X