For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எந்த மேடைக்கு வேண்டுமானாலும் வரத் தயார்.. ஸ்டாலின் வர வேண்டும்.. மீண்டும் அன்புமணி சவால்!

Google Oneindia Tamil News

கரூர்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் எந்த மேடையில் விவாதிக்க அழைத்தாலும் அந்த மேடையில் தான் வர தயார் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் சவால் விட்டுள்ளார்.

வேலூரில் இன்று பாமக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று மதுவுக்கு எதிரான கோஷங்களை இட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மதுவினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இத்தகைய மதுவை ஒழிக்க அதிமுக வும், திமுக வும் எந்த வித நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதற்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக கூறினார்.

Anbumani dares Stalin again

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

மதுவினால் அதிக சாலை விபத்து, தற்கொலை இள விதவைகள் ஏற்படுவதற்க்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நான்கு ஆண்டுகலில் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தைகள், எட்டாயிரம் கொலைகள் ஐந்தாயிரம் பெண்கள் தொடர்பான பாலியல் வன்முறைகள் மது வினால் நடக்கிறது. இதனால் அடுத்த தலைமுறை அழிவுக்கு வித்திடுகிறது. குறிப்பாக இந்தியாலில் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் மதுவினால் உயிரிழப்பதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 2 லட்டம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் மதுவிற்கு 15 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் 32 சதவிதத்தினர் அடிமையாகி இருப்பதாக ஆய்வில் வந்திருக்கிறது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வர வேண்டும். இந்த போராட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது தமிழக மக்களின் சமுகம், சுகாதாரம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி பிரச்சனை.

ஆண்டுதோரும் 26 ஆயிரம் கோடி ரூபாயை மக்களின் பணத்தை கொள்ளையடித்து அதன் மூலம் தேவையற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கு காரணம் அதிமுக மட்டும் இல்லை என்றும் திமுக வும் காரணம்.

1971 ல் திமுக தலைவர் கருணாநிதி, மதுவை தமிழகத்திற்கு மீண்டும் அறிமுகப்படுத்தியவர், அதற்குப் பிறகு தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி மதுவின் விற்பனையை அதிகரிப்பதற்கு வழிவகை செய்து வருகின்றன.

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் சொத்து வழக்கில் கர்நாடக அரசு திர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதி, குமாரசாமி ஜெயலலிதா தவறே செய்யவில்லை என்று குறிப்பிடவில்லை. அவர் தவறு செய்திருக்கிறார், ஆனால் அந்த தவறு பத்து விழுக்காட்டிற்க்கு கீழ் இருப்பதாகவும், அந்த தவறு 2 கோடியே 86 லடசம் ஊழல் செய்திருப்பதாக நீதியரசர் கூறியுள்ளார்.

சாதாரண அரசு அதிகாரிகள் ஐந்தாயிரம் ரூபாய்க்கே கைது செய்யப்படுகிறார்கள். மக்களின் இந்த பணம் ஜெயலலிதாவின் வருமானத்திற்க்கு 10 சதவீதத்திற்கு கீழானது என்று நீதியரசர் கூறி தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். இது தொடர்பாக கர்நாடக முதல்வரிடம் எங்களது கட்சியின் தலைவர் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. குறிப்பாக நிலம் கையகப்படுத்து சட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் இன்று மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு எதிரானது அதனை கைவிடவேண்டும்.

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறிசேன அரசால் இலங்கை தமிழக மக்களுக்கு அதிக திட்டங்கள் கொடுப்பதாக வாக்குறிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு மேலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும். இன்னும் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் ராணுவம் இருந்து வருகிறது. அவர்களை அங்கிருந்து விலக்க வேண்டும்

மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர விவாதிக்க நான் தயார்தான். இதுகுறித்து ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும். அவர் என்னை எந்த மேடைக்கு அழைத்தாலும் அங்கு வர தயாராக இருக்கிறேன் என்றார் அன்புமணி.

முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

English summary
PMK leader Dr Anbumani has dared DMK leader M K Stalin for a open deabte.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X