For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புமணியிடம் ரூ30 லட்சம்... மனைவி செளமியாவுக்கு ரூ6 கோடி நகைகளுடன் ரூ58.32 கோடி சொத்து

By Mathi
Google Oneindia Tamil News

பென்னாகரம்: பாமகவின் முதல்வர் வேட்பாளரான அன்புமணிக்கு ரூ30 லட்சம் மதிப்பிலான சொத்து மட்டுமே இருப்பதாகவும் அவரது மனைவி செளமியாவுக்கு ரூ6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மொத்தம் ரூ58.32 கோடி சொத்துகள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

அதில் அன்புமணி தமக்கும் தம்முடைய குடும்பத்தினருக்கும் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:

Anbumani declaresRs 30.12 lakh moveable asset

- அன்புமணியிடம் கையிருப்பாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கி கணக்குகளில் ரூ1 லட்சத்து 95 ஆயிரத்து 315 ரூபாய் உள்ளது.

- அன்புமணியிடம் 27 லட்சத்து 69 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன.

- சொந்தமாக கார் உட்பட எந்த ஒரு வாகனமும் கிடையாது.

- அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை.

- பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

- மொத்தமாக அன்புமணியிடம் ரூ30.12 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன.

அன்புமணி மனைவி செளமியா சொத்து விவரம்...

- சௌமியாவுக்கு கையிருப்பு ரொக்கம் ரூ.55 ஆயிரம் உள்ளது.

- வங்கியில் ரூ85 ஆயிரத்து 902 உள்ளது

- கார் மதிப்பு ரூ9 லட்சத்து 47 ஆயிரம்.

- தங்கம், வெள்ளி, வைர நகைகள் மதிப்பு ரூ6 கோடியே 70 லட்சத்து 46 ஆயிரத்து 562 ரூபாய் உள்ளது.

- அசையா சொத்து மதிப்பு ரூ51. 62 கோடி

- பல்வேறு இடங்களில் 6 தொழிற்சாலைகள் உள்ளன.

- அசையா சொத்துகளாக காவேரிப்பாக்கம், திண்டிவனம், தைலாபுரம், செட்டிக்குப்பம், ஏற்காடு (கே.புதூர்) ஆகிய இடங்களில் விவசாய நிலங்களாக சந்தை மதிப்பில் ரூ.8 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 500 உள்ளது.

- விவசாயம் அல்லாத நிலங்களாக சென்னை தி.நகர், அரும்பாக்கம், பத்மநாப நகர் ஆகிய பகுதிகளில் சந்தை மதிப்பில் ரூ.16 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரம் உள்ளது.

- வணிக வளாகங்கள் சந்தை மதிப்பில் ரூ.38 லட்சம் மற்றும் தி.நகர் குடியிருப்புக் கட்டடம் சந்தை மதிப்பில் ரூ.80 லட்சம் உள்பட ரூ.26 கோடியே 21 லட்சத்து 93 ஆயிரத்து 500 ஆகும்.

- கடனாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.3 கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்து 468 உள்ளது.

- மகள் சஞ்சித்ரா கையிருப்பு ரொக்கம் ரூ.10 ஆயிரம் மற்றும் வங்கி இருப்பு ரூ.99 ஆயிரத்து 760 உள்ளது.

- மகள் சங்கமித்ராவுக்கு கையிருப்பு ரொக்கம் ரூ.25,000 மற்றும் வங்கி இருப்பு ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 132 ரூபாய் உள்ளது.

- சங்கமித்ரா பெயரில் ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 573 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன

- சஞ்சித்ரா பெயரில் ரூ.20 லட்சத்து 63 ஆயிரத்து 21 மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.

- 2014-15 நிதியாண்டில் அன்புமணி தனது பெயரில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 170-க்கும் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்.

- செளமியா ரூ.64 லட்சத்து 73 ஆயிரத்து 242 வருமான வரி தாக்கல் செய்துள்ளார். விவசாயம் தொடர்பான வருவாயாக ரூ.25 லட்சம் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்.

English summary
PMK's chief ministerial candidate Anbumani Ramadoss has declared moveable assets of Rs 30.12 lakh in his election affidavit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X