For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளித்த ஏப்பம் விடுபவனுக்கு பசி ஏப்பத்தின் நிலை புரியாது - உர்ஜித் படேலுக்கு அன்புமணி, வாசன் கண்டனம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அன்புமணி, ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உர்ஜித்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தராமல், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் பணவீக்கம் ஏற்படும் என்று உர்ஜித் படேல் கூறியுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Anbumani and GK Vasan condems RBI governor

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்து மிகவும் குரூரமானது.

புளித்த ஏப்பம் விடுபவனுக்கு பசி ஏப்பக்காரனின் நிலை புரியாது என்பார்கள். உர்ஜித் பட்டேலின் நிலையும் அதேபோல் தான். உர்ஜித் பட்டேலின் ஊதியம் கடந்த வாரம் தான் ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்த அளவு ஊதிய உயர்வு பெறும் உர்ஜித் பட்டேல்களால் ஆண்டுக்கு 3 சதவீதம் கொள்முதல் விலை உயர்வு பெறும் விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள முடியாது. எனவே, உர்ஜித்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்தராமல், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

அடுத்தகட்டமாக, வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலை குறித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; நிலுவையில் உள்ள பாசனத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் ஒருபோதும் கடன் தள்ளுபடி கோர மாட்டார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இதே போல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். நாடு முழுவதும் விவசாயத் தொழில் தான் பிரதான தொழிலாக உள்ளது.

நாட்டில் விவசாயத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். முதலாளிகளுக்கு கடனில் சலுகை, தள்ளுபடி செய்வதை தவிர்த்து வசூல் செய்ய வேண்டும். இதனை விட்டுவிட்டு விவசாயக் கடனை வசூல் செய்வதில் முனைப்போடு செயல்பட கூடாது. எனவே மத்திய அரசு விவசாயத் தொழிலைக் காப்பாற்றவும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாயத்தை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் நலன் காக்கவும் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
TMC leader G K Vasan and PMK youth wing leader Anbumnani Ramadoss has condemed Urjith Patel for farmers loan issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X