For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனப்பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை வேண்டும்... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்புமணி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை : சீனப்பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

சீனப்பட்டாசுகளின் வரவால் சிவகாசி மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளததாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...

anbumani

இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 85 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டுக்கு தேவையான 90 சதவீத பட்டாசுகள் உற்பத்தி செய்து சிவகாசி பட்டாசுகளின் முனையமாக திகழ்கிறது. சீனப்பட்டாசுகளின் வரவால் சிவகாசி மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 35 சதவீத பட்டாசுகள் தேக்கமடைந்து, பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இழப்பு எற்பட்டது. டெல்லி, குஜராத், மராட்டியம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யும் நோக்கில் இலக்கு நிர்ணயித்து நவிமும்பை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக சீனப்பட்டாசுகள் இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் ‘பொம்மைகள்'என்று தவறாக குறிப்பிட்டு 600 கண்டெய்னர்களில் சீனப்பட்டாசுகள் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.700 கோடி ஆகும். வணிக ரீதியாக உலை வைக்கும், சீனப்பட்டாசு பொதுமக்கள் பாதுகாப்புக்கு, இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடியது. பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் பெர்குளோரைடு உள்பட பல்வேறு ஆபத்து விளைவிக்கும் வேதி பொருட்களை உள்ளடக்கியது.

ஆகவே சீனப்பட்டாசுகள் இறக்குமதி செய்வதை தடை செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது பட்டாசுகளுக்கு வெளிநாட்டில் அதிக வரவேற்பு மற்றும் தேவை உள்ளது.

ஆனால் துறைமுகங்களில் போதுமான வசதி இல்லாததால் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யமுடியாத நிலை உள்ளது. சீன பட்டாசுகள் இறக்குமதி செய்வதை விட, சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

இவ்வாறு செய்தால் ரூ.6 ஆயிரம் கோடியில் உள்ள வர்த்தகம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். சிவகாசியில் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள ஆட்களின் எண்ணிக்கை, 15 லட்சமாக அதிகரிக்கும். சிவகாசியின் கட்டுமான வளர்ச்சி மேம்படும். பட்டாசு வர்த்தகத்தையே நம்பி இருக்கும் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Anbumani Ramadass wrote a letter to commerce minister nirmala sitharaman urges to ban on China crackers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X