For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவாதத்திற்கு அழைத்த சிம்பு.. அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில் என்ன தெரியுமா?

நடிகர் சிம்புவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவாதத்திற்கு அழைத்த சிம்பு...அம்புமணி கொடுத்த பதில்- வீடியோ

    சென்னை: சென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரிடரின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைவ் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு அவர் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது.

    சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. ஆனாலும், இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ் சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் உத்தரவாத பத்திரம் அளிக்க உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் உத்தரவாதப் பத்திரம் அளிப்பதற்காக சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜரானார். நீதிபதி சுபாதேவியிடம் உத்தரவாத பத்திரத்தை அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    மேல்முறையீடு கூடாது

    மேல்முறையீடு கூடாது

    இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக்கூடாது.

    நல்லா இருக்கனும் என்று கூறினேன்

    நல்லா இருக்கனும் என்று கூறினேன்

    நடிகர் விஜய்க்கு சர்கார் படம் விவகாரத்தில் நல்லது தான் கூறினேன். விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நல்ல உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும், புற்றுநோயால் பாதிக்கப்பட கூடாது, என்பது தான் எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

    சிம்புவிற்கு பதில் தர முடியாது

    சிம்புவிற்கு பதில் தர முடியாது

    மேலும், சிம்புவின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுதொடர்பாக விவாதிக்க நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் அதில் பங்கேற்று விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    சிம்பு வீடியோ

    சிம்பு வீடியோ

    நேற்று சிம்பு வெளியிட்ட வீடியோவில், சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதைப் பற்றி விமர்சிக்கும் பாமக அன்புமணி ராமதாஸுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என்று கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.

    English summary
    PMK’s youth wing president Anbumani Ramadoss says on Wednesday that not need to answer actor Simbu’s questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X