For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினை கேட்கிறேன்.. உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம்.. அன்புமணி அதிரடி கேள்வி

முக ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் சரமாரியாக விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Anbumani Ram Doss Criticizes DMK candidate in a speech at Vikravandi- வீடியோ

    சென்னை: "நான் என்ன கேட்கிறேன்.. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?" என்று எம்பி அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வாக்குகூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுகவையும், அக்கட்சி தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

    "தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு வன்னியர்கள் மேல பாசம் வந்துடும். தேர்தல் முடிஞ்சதுன்னா, முடிஞ்சிப்போச்சு. இப்போ இடைத்தேர்தல் வந்துருக்கு இல்லே, அதான் வன்னியர்கள் மேல பாசம்.

    ஸ்டாலினுக்கு நான் புதுப் பேரு வச்சிருக்கேன்.. அதை தவிர வேற ஒன்னையும்.. அன்புமணி அட்டாக் பேச்சுஸ்டாலினுக்கு நான் புதுப் பேரு வச்சிருக்கேன்.. அதை தவிர வேற ஒன்னையும்.. அன்புமணி அட்டாக் பேச்சு

    வன்னியர்கள்

    வன்னியர்கள்

    ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்த இடைத்தேர்தலுக்காக திடீரென ஸ்டாலினுக்கு "நாங்க திமுக திரும்பவும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தனியாக தருவோம்" என்கிறார்.

    என்ன கிழிச்சீங்க?

    என்ன கிழிச்சீங்க?

    ஏன்.. 50 ஆண்டுகாலம் ஆட்சியில இருந்தீங்களே.. உங்க தந்தை 5 முறை முதலமைச்சர்... நீங்கள் ஒருமுறை துணை முதலமைச்சர்.. அப்போ என்ன கிழிச்சீங்க? வன்னியர்கள் இப்பதான் கண்ணுக்கு தெரியுதா? அப்போ தெரியாதா உங்களுக்கெல்லாம்?

    விக்கிரவாண்டி

    விக்கிரவாண்டி

    எங்க ஐயா உங்கள பார்த்து கெஞ்சினாரே.. இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு தாங்கள் என்று உங்க தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் பலமுறை போய் கெஞ்சினாரே.. ஏன் அப்பவெல்லாம் தெரியலையா.. இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரத்திலதான் வன்னியர்கள் மேல ஆசை வருது.. பாசம் வருதாம்..

    ஏ.கோவிந்தசாமி

    ஏ.கோவிந்தசாமி

    அது மட்டும் இல்லை.. இந்த மாவட்டத்தில் நம்முடைய மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய ஏ.கோவிந்தசாமி அவர்கள் முதன்முதலில் அவர்தான் அந்த காலத்துல போட்டியிட்டார். அவர்தான் திமுகவுக்கு அந்த உதயசூரியன் சின்னத்தையே கொடுத்தவர். அப்படிப்பட்ட ஏஜி..யை 1967-ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில், அமைச்சர் பதவியெல்லாம் அவருக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பிறகு தகராறு பண்ணிதான் பதவி தந்தாங்க.

    மணி மண்டபம்

    மணி மண்டபம்

    ஏ.கோவிந்தசாமிக்கு, இத்தனை ஆண்டுகள் எதுவும் செய்யாமல், ஆட்சிக்கு வந்தால் மணிமண்டபம் கட்டப்போவதாகச் சொல்கிறார். கருணாநிதிக்கு உடனே நினைவு மண்டபம் கட்டுவார்களாம், ஏ.ஜிக்கு மணிமண்டபம் கட்ட ஆட்சிக்கு வரவேண்டுமாம். வன்னியர் மிகுந்த விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலர் பதவி ஒருவருக்கும் இல்லை. அக்கட்சியில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் இல்லை" என்றார்.

    English summary
    pmk mp anbumani ramadoss slams mk stalin and dmk in his vikkravandi election compaign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X