For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஐபி தொகுதிகளிலேயே அன்புமணி தொகுதியில்தான் எக்கச்சக்க வாக்குப் பதிவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் முக்கியமான விஐபி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட பென்னாகரம் தொகுதியில்தான் அதிக அளவிலான வாக்குப் பதிவு நடந்துள்ளது.

மிகக் குறைந்த வாக்குப் பதிவு நடந்துள்ள தொகுதி பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்டுள்ள விருகம்பாக்கம் தொகுதியாகும்.

திமுக தலைவர் கருணாநிதி, பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தொல் திருமாவளவன், சீமான், சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட்டுள்ள தொகுதிகளில் வாக்குப் பதிவு 70 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் போட்டியிட்ட நெய்வேலி தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அன்புமணி நம்பர் 1

அன்புமணி நம்பர் 1

பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி பென்னாகரம் தொகுதியில் நிற்கிறார். இங்குதான் தமிழகத்திலேயே 2வது அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதாவது 87.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நம்பர் 2 விஜயகாந்த்

நம்பர் 2 விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அங்கு 82.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேல்முருகன்

வேல்முருகன்

பண்ருட்டி வேல்முருகன் கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அங்கு 80.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜி.கே.மணி

ஜி.கே.மணி

பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டுள்ள மேட்டூர் தொகுதியில் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருமாவளவன்

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட்டுள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதியில் 77.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கருணாநிதி தொகுதியில் 77.12

கருணாநிதி தொகுதியில் 77.12

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 77.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் 76.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சீமான்

சீமான்

நாம் தமிழர் கட்சித் தலைவர் தலைவர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர். அத்தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சரத்குமார்

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் 72.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

தேமுதிகவிலிருந்து வெளியேறி மக்கள் தேமுதிகவை உருவாக்கி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 69.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆர்.கேநகர்

ஆர்.கேநகர்

முதல்வர் ஜெயலலிதா, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பேராசிரியர் வசந்தி தேவி ஆகியோர் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 67.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொளத்தூர்

கொளத்தூர்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் களம் கண்டுள்ள கொளத்தூர் தொகுதியில் 64.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோவை தெற்கு

கோவை தெற்கு

தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் 61.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்

இருப்பதிலேயே மிகவும் குறைவான வாக்குப் பதிவு பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடும் விரும்பாக்கத்தில்தான் நடந்துள்ளது. அங்கு 57.90 வாக்குகளே பதிவாகியுள்ளன.

English summary
PMK leader Anbumani contesting Pennagaram has registered more votes among VIP seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X