For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் குல ஆண்டாள் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன? பாஜகவை சாடிய சீமான்

ஆண்டாள் தங்களின் குல மூதாதை என்றும் அவர் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆண்டாள் தங்களின் குல மூதாதை என்றும் அவர் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனவரி 7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது ஆண்டாள் குறித்து அவர் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிரான போராட்டங்கள் குறைந்தபாடில்லை.

பிரபாகரனின் மூத்த மகன்

பிரபாகரனின் மூத்த மகன்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தான் பிரபாகரனின் மூத்த மகன் என்று அவர் கூறினார்.

அப்போது இந்து மதம் ஏது?

அப்போது இந்து மதம் ஏது?

தமிழர்களின் எழுச்சிக்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் சீமான் கூறினார். மேலும் 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆண்டாள் என்ற அவர், அப்போது இந்து மதம் ஏது? என்றும் கேள்வி எழுப்பினார்.

வைரமுத்து வருத்தம்

வைரமுத்து வருத்தம்

மேலும் ஆண்டாள் தங்கள் குல மூதாதை என்ற சீமான், அவர் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். செய்யாத தப்புக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்து விட்டார் என்றும் சீமான் கூறினார்.

தமிழ் சமூகம் மீதான தாக்குதல்

தமிழ் சமூகம் மீதான தாக்குதல்

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீதான தாக்குதல், தனிமனித தாக்குதல் அல்ல என்று அவர் தமிழ் சமூகம் மீதான தாக்குதல் என கூறினார்.

English summary
Naam Tamilar party chief co ordinator Seeman says Andal is our Ancestor. He questioned that what is the concern for you rathar than Vairamuthu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X