For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு வந்த ஆந்திரா பக்தர் குளத்தில் மூழ்கி பலி

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு வருகை தந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர் தர்கா குளத்தில் மூழ்கி மரணமடைந்தார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திரமாநிலத்தை சேர்ந்த பக்தர் தர்கா குளத்தில் மூழ்கி உயிரிழப்பு-வீடியோ

    நாகப்பட்டிணம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு வருகைத் தந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர் தர்கா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 461வது கந்தூரி விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற இருக்கும் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்க வரும் பக்தர்கள் நாகூர் தர்கா குளத்தில் குளித்து செல்கின்றனர்.

    Andhra devotee drowned in Nagoor

    கந்தூரி விழாவை காண குடும்பத்தோடு வருகைதந்த, ஆந்திர மாநிலம், ஓங்கூர் மாவட்டத்தை சேர்ந்த ஷேக்முன்னா என்பவர் தர்கா குளத்தில் குளிக்கும்பொழுது தண்ணீரில் மூழ்கி மாயமானார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பலமணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டு அவரது உடலை சடலமாக மீட்டனர்.

    சந்தன கூடு ஊர்வலத்தை பார்க்கவந்தபோது ஷேக் என்பவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வாக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    English summary
    A devotee from Andhra Pradesh drowned in Nagoor tank when he was attending the Santhana Koodu Kanthoori.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X