For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்பமேளாவுக்கு வாங்க... கருணாநிதிக்கு ஆந்திரா அமைச்சர் நேரில் அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திர மாநிலத்தின் கும்பமேளா திருவிழாவான 'கிருஷ்ணா புஷ்கரம் ' நிகழ்ச்சிக்காக ஆந்திர கல்வித்துறை அமைச்சர் தண்டா சீனிவாசராவ், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில கல்வித் துறை அமைச்சர் தண்டா சீனிவாசராவ் இன்று சென்னை வந்தார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

Andhra Education Minister met Karunanidhi in his home

அப்போது, கருணாநிதியிடம் ஆந்திராவின் கும்பமேளா திருவிழாவான 'கிருஷ்ணா புஷ்கரம் ' நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அவர் வழங்கினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கருணாநிதிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Andhra Education Minister met Karunanidhi in his home

இந்த சந்திப்பின் போது, கருணாநிதி ஆந்திர அரசுக்கு சில கோரிக்கைகள் விடுத்தார். தமிழகத்தில் இருந்து ரேணிகுண்டா சென்ற தமிழகர்கள் 32 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும், பாலாறு பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என ஆந்திர அமைச்சர் தண்டா சீனிவாசராவவிடம் கருணாநிதி வலியுறுத்தினார். இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆந்ததிர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வற்புறுத்துமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.

English summary
Andhra Education Minister Danda Srinivasa rao met DMK Chief Karunanithi and invited him to 'Krishna Pushkar' which is a festival in Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X