For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"படையப்பா"வுக்கு ஒரு கிரானைட் மலை... மலையப்பாவுக்கோ ஒரு வைர மலை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திராவில் வைரமலை கண்டுபிடிப்பு- வீடியோ

    சென்னை: படையப்பா படத்தில் ரஜினிக்கு ஒரு கிரானைட் மலை கிடைத்தது போல் ஆந்திரத்துக்கு ஒரு வைர மலை கிடைத்துள்ளது.கிரானைட் மலையை கொண்டு அந்தபடத்தில் ரஜினி எப்படி பெரும் பணக்காரர் ஆனாரோ அதுபோல் வைர மலையை கொண்டு ஆந்திராவும் பெரும் வளர்ச்சி பெறும் என ஒப்பிட தோன்றுகிறது.

    ஆந்திர மாவட்டம் கர்னூலில் உள்ள சென்னமலையில் ஒரு பெரிய வைர மலை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரண புதையலை தேடி வந்த நிலையில் தற்போது வைரமலையே கிடைத்ததால் ஆந்திர அரசுக்கு ஜாக்பாட் அடித்தது.

    இந்த நிகழ்வுகள் படையப்பா கதையுடன் நன்கு ஒத்து போயுள்ளது.

    நடந்தது என்ன?

    நடந்தது என்ன?

    படையப்பா திரைப்படத்தில் சிவாஜி குடும்பத்தினர் அவரது தம்பி மணிவண்ணன் குடும்பத்தினர் ஏமாற்றி அவரது சொத்துகளை வாங்கி கொள்வர். எனினும் சிவாஜி தனது மகன் ரஜினி சம்பாதித்து அனுப்பும் பணத்தில் அவருக்கென்று ஒரு கல் குவாரியை வாங்கியிருப்பார்.

    ஏழ்மை நிலைக்கு வரும் ரஜினி

    ஏழ்மை நிலைக்கு வரும் ரஜினி

    வீடு, வாசல் சொத்து ஆகியவற்றை இழந்ததால் சிவாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிடுவார். எத்தனை சொத்துகள் போனாலும் தனது தம்பி குடும்பத்துக்கு கல்குவாரியை எழுதிக் கொடுக்க விடாமல் சிவாஜியின் போட்டோ தடுப்பது போன்று ஒரு காட்சி வரும். பின்னர் தனது தாய் லட்சுமி மற்றும் தங்கை சித்தாராவுடன் கல்குவாரி அருகே குடிசை கட்டி கொண்டு சென்றுவிடுவார்.

    கிரானைட் குவாரி

    கிரானைட் குவாரி

    ரஜினி அந்த கல்குவாரியில் வெட்டியெடுத்து வேலை செய்யும் போதுதான் தெரியவரும். அது வெறும் கல் குவாரி அல்ல. பொக்கிஷமான கிரானைட் குவாரி என்பது தெரியவரும். வாழ்தக்கையில் ஆயிரம் தடைகளப்பா... தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா... என்ற பாடல் ஓடி கொண்டிருக்கும் போதே கிரானைட் குவாரியை கொண்டு விட்ட சொத்துகளுக்கு மேல் அதிகமாக வாங்கி குவிப்பார் ரஜினி.

    மக்கள் ஏமாற்றம்

    மக்கள் ஏமாற்றம்

    அதுபோல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், கடந்த 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா என்ற மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகரானது. மேலும் ஆந்திராவின் வளங்கள் எல்லாம் தெலுங்கானாவுக்கு பிரிந்து சென்றதால் ஆந்திர மாநில மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    வைர மலை

    வைர மலை

    மக்கள் வருத்தப்பட்டதை அடுத்து ஆந்திராவின் ஸ்ரீசைலம் மலை பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி 5 லட்சம் டன் யுரேனியத்தை கண்டுபிடித்தது. இவை மற்ற நாட்டு யுரேனியத்துடன் தரமிக்கது என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதையலுக்காக தோண்டப்பட்ட இடத்தில் யானைகளின் தந்தம், குதிரைகளின் எலும்புகள் ஆகியவை கிடைத்தாலும் விடாது தோண்டியதன் விளைவு வைர மலையே கிடைத்துவிட்டது. இதை வைத்து ஆந்திர மாநில பெரும் வளர்ச்சி பாதைக்கு செல்லலாம். மேலும் உலகிலேயே பணக்கார கோயிலான திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் இங்கு இருப்பதால் ஆந்திர மாநிலம் தற்போது வைர மலையால் இரட்டை கோடீஸ்வர மாநிலமாக உருபெற்றுள்ளது.

    English summary
    Andhra Pradesh has found Diamond mountain in Karnool District. Using this Andhra can become more richer like Padayppa Rajini's life style changed after he got Granite mountain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X