For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில் புரிய உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம்.. தமிழகத்தின் நிலை என்ன?

இந்தியாவில் தொழில் புரிய உகந்த மாநிலங்களுக்கான பட்டியலில் ஆந்திர பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் தொழில் புரிய உகந்த மாநிலங்களுக்கான பட்டியலில் ஆந்திர பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இதில் 15ஆவது இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது.

நாட்டில் தொழில் புரிய உகந்த மாநிலங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எல்லா வருடமும் மத்திய நிறுவன கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும் உலக வங்கியும் இணைந்து இப்படி பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

நாட்டின் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது, எதை மாற்ற வேண்டும் என்று கண்டுபிடிக்க இந்த ஆய்வு மேற்கொள்ள படும். அந்த ஆய்வின் அடிப்படையில் மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு மாநிலங்கள் தரம் பிரிக்கப்படும்.

ஆந்திரா முதல் இடம்

ஆந்திரா முதல் இடம்

ஆந்திர பிரதேச மாநிலம் இந்த முறை முதலிடம் பிடித்துள்ளது. சென்ற முறையும் ஆந்திராதான் முதல் இடம் பிடித்து இருந்தது. அதேபோல் இரண்டாம் இடத்தை தெலுங்கானா பெற்றுள்ளது. இரண்டு மாநிலங்களிலும், பிரிவிற்கு அதிக அளவில் தொழில் தொடங்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதனால் தற்போது ஆந்திர முதல் இடம் பிடித்துள்ளது. 98.42 மதிப்பென்கள் பெற்று ஆந்திரா முதல் இடம் பிடித்துள்ளது.

மோசமான மாநிலங்கள்

மோசமான மாநிலங்கள்

அதற்கு அடுத்தபடியாக ஜார்கண்ட், குஜராத், சட்டிஸ்கர், மத்திய பிரதேச, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் இதில் பின்தங்கி இருக்கிறது. மேகாலயா, அருணாசல பிரதேசம், லட்சத்தீவு, கேரளா ஆகிய மாநிலங்கள் பின்தங்கி இருக்கிறது. டெல்லி 23ம் இடத்தை மட்டுமே பெற்றுள்ளது.

எப்படி தேர்வு செய்கிறார்கள்

இதை தேர்வு செய்ய இந்த அமைப்புகள் சில அளவுகோள் வைத்து இருக்கிறது. அதன்படி, பெரு மாநிலத்தில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் அந்த மாநில அரசு எப்படி அணுகுமுறை வைத்து இருக்கிறது என்று நிறுவனத்திடமே கேட்டு ஆய்வு நடத்துவார்கள். அதேபோல், புதிய தொழில் தொடங்க எவ்வளவு ஊக்கம் அளிக்கிறார்கள் என்றும் ஆய்வு நடத்தி மதிப்பெண் அளிப்பார்கள்.

தமிழ்நாடு எப்படி

தமிழ்நாடு எப்படி

இந்த நிலையில் இதில் தமிழகம் 95.93 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது. இதன் உளம் தமிழகம் 15வது இடத்தை பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் கேரளாவும், தமிழகமும் மட்டுமே பின்தங்கி இருக்கிறது. அதேபோல் பல தொழில்நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் மூடப்பட்டுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி தொடங்கி பணமதிப்பிழப்பு வரை பல காரணம் சொல்லப்படுகிறது.

English summary
Andhra takes the No.1 position in the best state to start Business, TN goes down to 15th place according to the ranking prepared by the World Bank and the Department of Industrial Policy and Promotion (DIPP).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X