For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் ஆங்கிலோ- இந்திய 'உணவுத் திருவிழா'

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஆங்கிலோ-இந்திய உணவுத் திருவிழா இந்த வருடமும் தொடங்கியுள்ளது.

இவ்விழாவில் அந்த ஹோட்டலின் முதன்மை செப் ஒருவர் 108 வருடங்கள் பழமையான உணவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பார்வைக்கு வைத்தார்.

அதிலுள்ள உணவு வகைகள்தான் இந்த உணவுத்திருவிழாவில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

கையால் எழுதப்பட்ட குறிப்புகள்:

கையால் எழுதப்பட்ட குறிப்புகள்:

முழுவதும் கையால் எழுதப்பட்ட உணவுக் குறிப்புகள் அடங்கிய இந்த புத்தகத்தில் உள்ள உணவுவகைகளை நடைமுறைக்கு கொண்டு வர நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம்" என்று பெங்களூர் தாஜ் வொயிட் பீல்ட், விவண்டாவின் முதன்மை செப் அர்ஜோமான் இரானி தெரிவித்தார்.

10 நாள் திருவிழா:

10 நாள் திருவிழா:

ஆகஸ்டு 22 முதல் 31 வரை நடைபெற உள்ள இந்த உணவுத்திருவிழாவினை இரானி துவங்கி வைக்கின்றார். சென்னை, பின்னி ரோடில் அமைந்துள்ள தாஜ் கன்னிமாராவில் இத்திருவிழா நடைபெற உள்ளது.

120 உணவு குறிப்புகள்:

120 உணவு குறிப்புகள்:

ஆஸ்திரியாவைச் சேர்ந்த அப்பழமையான உணவுப் புத்தகத்தில் 120 உணவுவகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

குடும்ப உணவு வகைகள்:

குடும்ப உணவு வகைகள்:

"குடும்ப வழக்கமான உணவு வகைகள் அடங்கிய இப்புத்தகமானது ஹாரி பிளேக் என்பவரால் எழுதப்பட்டது. இப்புத்தகமானது அவருடைய கொள்ளுப்பேத்தியிடம் இருந்து பெறப்பட்டது" என்றும் இரானி தெரிவித்தார்.

ஜின்ஜெர் ஒயினின் சுவை:

ஜின்ஜெர் ஒயினின் சுவை:

அங்கு பரிமாறப்பட உள்ள உணவுகளில் ஆல்கஹால் வகையைச் சேராத ஜின்ஜெர் ஒயினும் ஒன்றாகும். இனிப்பும், இஞ்சியின் சுவையும் சேர்ந்த இதன் சுவை நாக்கில் நாட்டியமாடும் ஒன்றாக விளங்கும்.

இனிமையான உணவுகள்:

இனிமையான உணவுகள்:

இந்த உணவுகளின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் மிகவும் காரமாக இல்லாமலும் அதற்காக மிகவும் ருசியில்லாமலும் இல்லாமல் மனதுக்கும், நாவிற்கும் இனியதாக அமைந்துள்ளதுதான்.

கொஞ்சம் காரம்:

கொஞ்சம் காரம்:

ஒரே ஒரு ஸ்பைசியான உணவு என்றால் அது ஃப்ரைடு மசாலா பிரான் மட்டும்தான்.

எளிதான உணவு வகைகள்:

எளிதான உணவு வகைகள்:

"எளிதாக கிடைக்கும் உணவுப் பொருட்களின் மூலமாகதான் இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.பிளேக் தன்னுடைய மீன் கறியை அங்கு எளிதாக கிடைக்கும் மீன் வகைகளை வைத்துதான் செய்துள்ளார்" என்றும் இரானி தெரிவித்தார்.

2 வருடம் ஆச்சு:

2 வருடம் ஆச்சு:

"அவரின் பேத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தை அளித்தார். இவற்றை நடைமுறையில் கொண்டுவருட 2 வருட காலம் பிடித்தது" என்றும் கூறியுள்ளார்.

வரலாற்று உணவுகள்:

வரலாற்று உணவுகள்:

"தற்போதைய தலைமுறைக்கு வரலாற்றினைத் திரும்பி பார்க்கும்படியான ஒரு வாய்ப்பாக இது அமையும். மேலும், அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் ரசிக்க ஒரு திருவிழா இதுவாகும்" என்றார்.

கண்ணைக் கட்டுதே:

கண்ணைக் கட்டுதே:

இரண்டு பேருக்கான உணவானது, ஆல்கஹால் இல்லாமல் 3,500 ரூபாய் என்பதுதான் கொஞ்சம் மூச்சுவிட வைக்கின்றது.

English summary
It’s an heirloom Anglo-Indian cuisine food festival at the Vivanta by Taj-Connemara, a top chef said, proudly showing a 108-year-old notebook containing recipes of a bygone era.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X