For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போயஸ் இல்லத்தில் எதிரொலிக்கிறதாம் பெண்ணின் அலறல் சத்தம்.. ஜெ.வை தொடரும் மர்மம்! பின்னணி என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் இல்லத்திலிருந்து இரவு நேரங்களில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக அந்த பங்களா ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளதன் பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் தேவி பாரதி இதற்கா காரணத்தை தனக்குரித்தான பாணியில் பகிர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுக்கவே மர்மங்களால் நிரம்பியது. அவர் எதற்காக தனது சொந்தபந்தங்களை அண்டவிடவில்லை, ஏன் அவர் யாரோ ஒரு பெண்மணிக்கு வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார், ஏன் அவர் திடீரென அமைச்சர்களை நீக்குவார், சேர்ப்பார், அவரது வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தன, இப்படி பல கேள்விகள் இதுவரை விடை அறியாதவை.

ஜெயலலிதா கேள்விக்கு அப்பாட்பட்டவராகவே வாழ்ந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஜெயலலிதாவின் மரணமும் மர்மமாகவே மாறிவிட்டது. இதுவரை அவர் எப்போது, எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு பலருக்கும் விடை தெரியவில்லை.

 மர்மங்கள்

மர்மங்கள்

இந்த மர்மங்கள் போதாதென்று ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், மர்மங்கள் தொடருகின்றன. சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து, கொடநாடு பங்களாவில் கொள்ளை, கொள்ளையடித்தவர்களின் மர்ம மரணங்கள் என ஜெயலலிதாவின் வாழ்க்கையை சுற்றிய மர்மங்கள் தொடருகின்றன.

 ஊழியர்களின் அச்சம்

ஊழியர்களின் அச்சம்

இந்த நிலையில், போயஸ் இல்லத்திலும் ஒரு மர்மம் இப்போது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம், போயஸ் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் அச்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 டிடிவி தினகரன் குடும்பம்

டிடிவி தினகரன் குடும்பம்

"தினமும் ராத்திரி வேளைகளில் பெண்ணில் அலறல் சத்தம் கேட்கிறது. டிடிவி தினகரன் குடும்பம் இதனால்தான் பயந்துபோய் போயஸ் இல்லத்தைவிட்டு வெளியேறிவிட்டது. இந்த சத்தம் காரணமாக எங்கள் இரவுகள் அச்சத்தோடுதான் கழிகின்றன" என்று கூறியுள்ளார் போயஸ் கார்டன் வீட்டு பணியாளர் ஒருவர்.

 அலறல்

அலறல்

"சசிகலாவின் உறவுக்காரர் ஒருவர் ஜெயலலிதாவின் அறையில் ஒரு ஆலோசனையில் ஈடுபட்டார். அன்று இரவுதான் இதுபோன்ற சத்தம் முதலில் கேட்டது. இதனால் நாங்கள் மிகவும் அச்சத்தோடுதான் வேலை பார்க்கிறோம்" என்று மற்றொரு ஊழியர் தெரிவித்துள்ளார்.

 கடந்த சில வாரங்களாக

கடந்த சில வாரங்களாக

சசிகலா போயஸ் இல்லத்தில் தங்கியிருந்துதான், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை சந்தித்து வந்தார். அப்போதெல்லாம் பிரச்சினை இல்லையாம். சசிகலா கைதுக்கு பிறகு சமீபமாக சில வாரங்களாக இந்த சத்தம் இரவு நேரங்களில் கேட்கிறதாம். ஒரு பெண் ஆத்திரத்தில் கத்துவதை போலவும், அழுவதை போலவும் அந்த குரல் மாறி, மாறி ஒலிக்கிறதாம்.

 துரோகம் செய்தவர்கள் நிலை

துரோகம் செய்தவர்கள் நிலை

ஜெயலலிதாவுக்கு ஆகாதவர்கள் அல்லது அவருக்கு துரோகம் செய்தவர்கள் யாருமே இப்போது நிம்மதியாக இல்லை. சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீரென மரணமடைந்தார். சசிகலா பெங்களூர் சிறைக்கு சென்றுள்ளார். டிடிவி தினகரன் டெல்லி சிறையில் அடைபட்டுள்ளார். போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று நடுங்கிய குரலில் கூறுகிறார்களாம், அங்குள்ள ஊழியர்கள்.

 எல்லாம் மன பயம்

எல்லாம் மன பயம்

எழுத்தாளர் தேவி பாரதி இதுகுறித்து ஆங்கில நாளிதழிடம் கூறுகையில், அதிமுகவினர் எப்போதுமே ஜெயலலிதாவை பார்த்து பயந்தே பழகியவர்கள். எனவே ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பயப்படுகிரார்கள். இதெல்லாம் யாரோ ஆதாயம் தேவைப்படுவோர் செய்யும் வேலைகள்தான். ஆனால் அதிமுகவினர் இதை ஏதோ அமானுஷியமாக பார்க்கிறார்கள். அதிமுக போன்ற கட்சியில், அப்படித்தான் யோசிக்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொள்ளை, சிறுதாவூர் தீ விபத்து போன்றவற்றின் பின்னணியில் மனிதர்கள்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Sources in Poes Garden claim that they hear “strange voices that sound like wails” every night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X