For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசியில் சாலை வசதி கோரி மாடு, கன்றுடன் வந்து நூதன முறையில் மனு அளித்த மக்கள்

சாலைவசதி கோரி பொதுமக்கள் மாடுகளுடன் வந்து மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

தென்காசி:சாலை வசதி செய்து தரக்கோரி தென்காசி நகராட்சி ஆணையாளரிடம் மாடுகளுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்காத காரணத்தினால் தமிழகத்தின் ஏராளமான மாவட்டங்களில் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, சாலைவசதி, சுகாதார வசதிகள் போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Angry people went with cows to give petition to authorities in Nellai

எனவே இதனை முன்னெடுத்து போராட்டங்கள், சாலைமறியல்களை போன்றவை நடத்தி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கவனிக்க நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என எந்த துறையிலும் அதிகாரிகளோ, பிரதிநிதிகளோ இன்றி நாளுக்கு நாள் மக்கள் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்,.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதி சொல்லமுடியாத அவலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்து அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி வருகிறது.

Angry people went with cows to give petition to authorities in Nellai

இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இடறி விழுவதும், விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாக நடந்து வருகிறது இதுகுறித்து பலமுறை நகராட்சி ஆணையரிலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் வரை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

எனவே இந்த சாலைகளை சீரமைக்க கோரியும், இதுவரை நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் மனு அளிக்க முடிவு செய்தனர்,

அதன்படி, பசுமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியுடன் நகராட்சி அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டனர். பின்னர் தாங்கள் அழைத்து வந்த மாடுகளின் கழுத்தில் மனு ஒன்றினை எழுதி கழுத்தில் தொங்கவிட்டனர்.

Angry people went with cows to give petition to authorities in Nellai

அந்த மனுவில், 'மனிதர்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகமே கால்நடைகளாகிய நாங்கள் கொடுக்கும் மனு மீதாவது நடவடிக்கை எடு' என்று எழுதப்பட்டிருந்தது.

பின்னர் மாடுகளுடன் ஆணையாளரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மனு அளித்த பசுவின் கால் தடங்களையே கையெழுத்தாகப் பெற்று நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.

பொதுமக்கள் மாடுகள், மற்றும் கன்றுக்குட்டிகளுடன் நகராட்சி அலுவலகம் வந்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

English summary
The people of Tenkasi, were protesting against the municipal office with the cow and calf. For a long time, the demands of the migrants did not meet their demands and reported that the civilians had come with cows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X