For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதா தற்கொலை: டிவி விவாதங்களில் 'கொடூர' அரசியல் செய்தவர்களை வெளுத்துக் கட்டிய பத்திரிகையாளர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு என்பது தொடர்பான டிவி விவாதங்களில் கொடூர அரசியல் செய்தவர்களை வெளுத்துக் கட்டினார்கள் பத்திரிகையாளர்கள்.

அனிதா தற்கொலை தொடர்பாக புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழகம் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விவாதம் நடைபெற்றது. புதிய தலைமுறையில் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

விஷமனத்தானது நாராயணன்..

விஷமனத்தானது நாராயணன்..

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் நாராயணன் பேசிய கருத்துகளுக்கு கார்த்திகைசெல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் நாராயணன், நீங்கள் பேசுவது விஷமத்தனமானது என குற்றம்சாட்டுகிறேன் என வெடித்தார்.

குணசேகரனின் அறச்சீற்றம்

குணசேகரனின் அறச்சீற்றம்

இதேபோல நியூஸ் 18 தமிழ்நாடு டிவியில் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகர் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதத்தை ஒருங்கிணைத்தார். தொடக்கம் முதலே குணசேகரன் அறச்சீற்றத்துடனேயே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நீலிக்கண்ணீர், நாடகம் என குற்றச்சாட்டு

ஆனால் பாஜகவின் கரு. நாகராஜன், டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துகளால் கொந்தளித்தார் குணசேகர். நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியபோதும் நாடகமாடுகிறீர்கள் என கரு நாகராஜன் கூறியபோதும் குணசேகரன் கொந்தளிப்பை வெளியிப்படுத்தினார்.

மனசாட்சியாக பத்திரிகையாளர்கள்

மனசாட்சியாக பத்திரிகையாளர்கள்

பொதுவாக விவாதங்களில் நடுநிலை என்கிற பெயரில் ஒருவித போலித்தனத்தை பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்துவர்; ஆனால் அனிதாவின் மரணம் தமிழகத்தை மனசாட்சி உள்ளவர்களை எப்படியெல்லாம் உலுக்கியிருக்கிறது என்பதற்கு இந்த மூத்த பத்திரிகையாளர்களின் அறச்சீற்றம் சாட்சியாக இருக்கிறது.

English summary
Tamil TV Channels Senior Journalists blast the Politicians who are supporting the NEET Exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X