For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதா தற்கொலை.. அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது இதுதான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ

    சென்னை: அனிதா தற்கொலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டிவி சேனல் ஒன்றுக்கு விஜயபாஸ்கர் கூறியதாவது: இழப்பு என்பது என்ன ஈடு கொடுத்தாலும் தீர்க்க முடியாது. அரசு கண்டிப்பாக துணையிருக்கும். வேதனையில் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையாக கருத்து கூறுவார்கள்.

    அதை பொறுமையாகதான் எதிர்கொள்ள வேண்டிவரும். நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய பகீரத முயற்சி, உச்சகட்ட முயற்சி எடுத்தோம். அட்வகேட் ஜெனரலே அரசு முயற்சிக்கு ஆதரவாகத்தான் கருத்து கூறியிருந்தார். கடைசி நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்விலும் அதிகப்படியாக மாநில பாடத் திட்டத்தில் பயின்றவர்கள்தான் எம்பிபிஎஸ் இடங்களை பிடித்துள்ளனர்.

    Anitha suicide: Minister Vijaya Bhaskar says the TN govt had tried its best

    அனிதாவின் தற்கொலை சம்பவம் எனக்கு ஆற்றொன்னா துயரத்தை கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    நீட் தேர்வை எழுத 3 வாய்ப்புகள் உள்ளன. இவ்வாண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்கள், அடுத்த வருடம் கூட தேர்தவை எழுதிக்கொள்ளலாம். தற்கொலை முடிவுக்கு யாரும் போய்விடக்கூடாது. நீட் தேர்வு ரத்து செய்ததால், 2500 சீட்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்தோம். அப்படி அரசு எல்லா வகையிலும் மாணவர்களுக்கு துணையாகத்தான் இருந்தது.

    English summary
    Minister Vijaya Bhaskar says the TN govt had tried its best to get exception from the NEET exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X