For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரண பயத்தை காட்டிய சென்னை அண்ணா சாலை... திடீர் பள்ளம் மூடப்பட்டு மீண்டும் வாகனங்கள் இயக்கம்!

சென்னை அண்ணா சாலை அருகே நேற்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் இன்று முடிவடைந்து அவ்வழியாக வாகனஙகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டதால் சேதமடைந்த சாலையை சிமென்ட் கலவை மூலம் சரி செய்யும் பணிகள் நிறைவுற்று இன்று அவ்வழியாக அனைத்து வாகனங்களு்ம வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ஒன்று சர்ச் பார்க் கான்வென்ட் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் இறங்குவதை உணர்ந்த டிரைவர் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கீழே இறங்கி 10 அடி ஆழத்திலான பள்ளத்தில் கவிழ்ந்தது.

Anna salai opens for transportation from today

இதைத் தொடர்ந்து அந்த பேருந்தை முந்த முயன்ற முகப்பேர் மருத்துவர் பிரதீப்புக்கு சொந்தமான காரும் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரும், பேருந்தும் கடுமையாக சேதமடைந்தது. தற்போது ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அது முக்கிய சாலை என்பதால் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து பள்ளத்தில் சிமென்ட் கலவை கொட்டப்பட்டு பேட்ச் பணிகள் செய்யப்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது அனைத்து வாகனங்களும் இயங்கி வருகின்றன. வாகன ஓட்டிகள் அச்சத்தோடு அப்பகுதியை கடந்து வருகிறார்கள்.

English summary
Road renovation work have done in Anna salai where a big hole occured yesterday near Church Park convent. Today all vehicles are allowed for transportation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X