For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை. ஊழல்: அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்... துணைவேந்தர் சூரப்பா உறுதி

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், எல்லோரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், எல்லோரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தற்போது தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

Anna University Exam Bribe: Will take action on everyone says, Vice-chancellor M K Surappa

இதில் 200 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் இந்த முறைகேடு குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஊழல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மறுமதிப்பீட்டு முறைகேடு புகாரில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை உறுதி. ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலை.யில் இடமளிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலை அனுமதிக்க மாட்டேன்.

ஊழல் நாடு முழுவதும் உள்ள பிரச்சினைதான். விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெறும். ஊழல் தொகை குறித்த சரியான தகவல் இல்லை.

தவறு நடந்து விட்டது, இனி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஊழல் நடைபெறவில்லை. அண்ணா பல்கலைக்கழக சார்பு கல்லூரியில்தான் ஊழல் நடந்துள்ளது.

அரசிடமிருந்து சலுகை கேட்டு கோரிக்கை வந்துள்ளது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்.விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் பலருக்கு தொடர்புள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ளவர்கள் என கூற முடியாது என்று துணைவேந்தர் சூரப்பா பேட்டியளித்துள்ளார்.

English summary
Anna University Exam Bribe: Will take action on everyone says, Vice-chancellor M K Surappa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X