For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி.. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட்!

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலை ஊழல்! 10 பேராசிரியர்கள் மேல் வழக்கு- வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Anna University professor Uma has been suspended

    அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரான உமா தற்போது பேராசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Anna University professor Uma has been suspendedAnna University professor Uma has been suspended for scam in the revaluation of exam papers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X