For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைவா இல்லை.. எக்ஸாம் இல்லை.. ஆனால் பிஹெச்டி பட்டம்.. அதிரவைக்கும் அண்ணா பல்கலை மோசடி!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் அதிர செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலையில் பி.ஹெச்டி படிப்பிலும் ஊழல்...அதிர்ச்சி தகவல்- வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் அதிர செய்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 400 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக பேராசிரியை உமா, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பிஹெச்டி துறை

    பிஹெச்டி துறை

    இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி துறையிலும் ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த துறையில் சுமார் 200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    கொடிகட்டி பறந்த முறைகேடு

    கொடிகட்டி பறந்த முறைகேடு

    கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு கால கட்டம் வரை பிஹெச்டி மாணவர்களை அதிக அளவில் சேர்த்துள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் முறைகேடும் கொடிகட்டி பறந்துள்ளது.

    ரூ.10 லட்சம் வரை

    ரூ.10 லட்சம் வரை

    பிஹெச்டி பயிலும் மாணவர்களின் ஆய்வு படிப்பை முடித்துக்கொடுக்க 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    நோ வைவா, நோ எக்ஸாம்

    நோ வைவா, நோ எக்ஸாம்

    5 ஆயிரம் நபர்களிடம் இதுபோன்று லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் பெற்ற பிஹெச்டி மாணவர்களிடம் இருந்து வைவா, நேர்க்காணல், தேர்வு என எதையுமே நடத்தாமல் அவர்களுக்கு பிஹெச்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    அதிர வைக்கும் ஊழல்

    அதிர வைக்கும் ஊழல்

    தமிழகத்தில் முன்னணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஊழல் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் அதிர வைத்துள்ளது.

    ஓரிரு நாளில்

    ஓரிரு நாளில்

    அண்ணா பல்கலையில் தோண்ட தோண்ட கிளம்பும் மோசடி பூதங்களால் கல்வியாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் எந்தெந்த துறைகள் இதுபோன்ற மோசடியில் சிக்கியுள்ளனவோ என்ற கேள்விக்கு இன்னும் ஓரிரு நாளில் விடை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Anna University scam: No viva No Exam for PhD students. Lot of scandal in the PhD research department at Anna University sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X