For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்

அண்ணா பல்கலைக்கழக மோசடியில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலையில் மேலும் ஒரு முறைகேடு அம்பலம்..வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக்கழக மோசடியில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் ஏற்கெனவே முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    எத்தனை பேர் மீது வழக்கு

    எத்தனை பேர் மீது வழக்கு

    அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பழைய நடைமுறை

    பழைய நடைமுறை

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 23 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில்தான் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா கடந்த 2017-ஆம் ஆண்டு பழைய நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

    கச்சிதமாக

    கச்சிதமாக

    23 மண்டலங்களில் நடைபெறும் மறுமதிப்பீட்டு முறையை ஒரே இடத்தில் திண்டிவனத்தில் நடத்துவதற்கான நடைமுறையை மாற்றியுள்ளார். எனவே மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு பணிகள் திண்டிவனம் மண்டல அதிகாரியான உதவி பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் கனகச்சிதமாக நடந்துள்ளது.

    இடை நீக்கம்

    இடை நீக்கம்

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை விரிவடையும் பட்சத்திலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பணி இடைநீக்கம் நீளுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    IT raids are expanded to 7 more Assistant Professor's house and office, there will be more persons trapped in this scandal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X