For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் வருகிறதா அமைச்சரவை மாற்றம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். இதனால் அமைச்சர்கள் மட்டத்தில் சற்றே பீதி ஏற்பட்டுள்ளதாம்.

தமிழகத்தில் அவ்வப்போது அமைச்சர்கள் நீக்கம், சேர்ப்பு, இலாகா மாற்றம் போன்றவை நடந்தவண்ணம் உள்ளது. அமைச்சர்கள் மீது, கோஷ்டி பூசல், ஊழல் புகார்கள் என பல்வேறு புகார்கள் சுமத்தப்படுவதையொட்டி அதன் பேரில் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது மாற்றத்தை அறிவிக்கிறார்.

cabinte

சமீபத்தில் கூட கேவி ராமலிங்கம் நீக்கப்பட்டார். ஏற்கனவே நீக்கப்பட்ட உதயக்குமார் மீண்டும் அமைச்சரானார். மேலும்,புதிய அமைச்சராக டாக்டர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். மேலும், சிறிய அளவில் இலாகா மற்றமும் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது, மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது.

விரைவில் நடைபெற நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான கே.ஏஸ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், நயினார் நாகேந்திரன், அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, சரோஜா, சி.வி.சண்முகம், ஏற்காடு சரோஜா, பாப்பா சுந்தரம், ஆர்.என்.கிட்டுசாமி ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகின்றது. புதிய அமைச்சர்கள் தை மாதம் பதவி ஏற்பார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Sources say Chief Minister Jayalalitha is planning for a major cabinet reshuffle soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X